திருப்பத்தூர் மாவட்ட கலெக்டருடன் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் சந்திப்பு
தமிழ்நாடு விவசாய சங்கத்தினர் மாவட்ட கலெக்டர் சிவன்அருளை சந்தித்து வாழ்த்து கூறினார்கள்.
திருப்பத்தூர்,
தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில தலைவர் எஸ்.ஏ.சின்னசாமி, மாநில துணைத்தலைவர் பரசுராமன், மாவட்ட தலைவர் வருணகுமார், ஒருங்கிணைப்பாளர் ராஜா, நகர தலைவர் தண்டபாணி மற்றும் தமிழ்நாடு விவசாய சங்கத்தினர் மாவட்ட கலெக்டர் சிவன்அருளை சந்தித்து வாழ்த்து கூறினார்கள்.
பின்னர் விவசாயிகள் சங்க மாநில தலைவர் எஸ்.ஏ.சின்னசாமி கூறுகையில், தேர்தல் விதிமுறைகள் அமலில் உள்ளதால் எந்த கோரிக்கையும் மாவட்ட கலெக்டரிடம் கொடுக்கவில்லை. திருப்பத்தூர் மாவட்டம் அமைத்து கொடுத்ததற்கு தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்து வாழ்த்துக்களை கூறினோம். தற்போது திருப்பத்தூர், ஆம்பூர் கூட்டுறவு சர்க்கரை ஆலைகள் கரும்பு அரவை நிறுத்தப்பட்டுள்ளது. உடனடியாக தமிழக அரசு நிதி ஒதுக்கி கரும்பு அரவை தொடங்கி விவசாயிகளை காப்பாற்ற வேண்டும். விவசாயிகள் பிரச்சினை குறித்து மாநில அளவில் திருப்பத்தூரில் கூட்டம் நடத்த உள்ளோம்’ என்றார்.
Related Tags :
Next Story