திட்டச்சேரியில் தீண்டாமை ஒழிப்பு முன்னணியினர் ஆர்ப்பாட்டம்


திட்டச்சேரியில் தீண்டாமை ஒழிப்பு முன்னணியினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 6 Dec 2019 4:30 AM IST (Updated: 5 Dec 2019 10:28 PM IST)
t-max-icont-min-icon

திட்டச்சேரியில் தீண்டாமை ஒழிப்பு முன்னணியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திட்டச்சேரி,

திட்டச்சேரி பஸ் நிலையத்தில் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி நாகை மாவட்டக் குழு சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் ஆர்.ஜீவானந்தம் தலைமை தாங்கினார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி ஒன்றிய செயலாளர் எம்.ஜெயபால், விவசாய சங்க ஒன்றிய செயலாளர் பொன்.மணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், மாநில துணை தலைவருமான மகேந்திரன், மாவட்ட செயலாளர் சுபா‌‌ஷ் சந்திரபோஸ், சி.ஐ.டி.யூ. மாவட்ட செயலாளர் சீனி. மணி, இந்திய ஜனநாயக வாலிபர் சங்க ஒன்றிய தலைவர் பிரபாகரன், மாவட்ட துணை செயலாளர் ராஜா, விவசாய சங்க ஒன்றிய தலைவர் ஸ்டாலின் பாபு, விவசாய தொழிலாளர் சங்க ஒன்றியக்குழு உறுப்பினர் சிங்காரவேலு ஆகியோர் பேசினர்.

ஆணவ கொலை

ஆணவ கொலைகள் நடைபெறாமல் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆணவ கொலைகளுக்கு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் கோ‌‌ஷங்கள் எழுப்பப்பட்டன.

முடிவில் மாவட்ட குழு உறுப்பினர் பாலு நன்றி கூறினார்.

Next Story