கடையநல்லூரில் போலீசார் கொடி அணிவகுப்பு
பாபர் மசூதி இடிப்பு தினம் கடையநல்லூரில் போலீசாரின் கொடி அணிவகுப்பு ஊர்வலம் நடைபெற்றது
கடையநல்லூர்,
பாபர் மசூதி இடிப்பு தினம்இன்று (வெள்ளிக்கிழமை)கடைபிடிக்கப்படுகிறது. அதனை முன்னிட்டு கடையநல்லூரில் பல்வேறு இஸ்லாமிய அமைப்புகள் ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளன. ஆனால் இந்த அமைப்புகளுக்கு ஆர்ப்பாட்டம், போராட்டம் நடத்த போலீசார் அனுமதிஅளிக்கவில்லை.
மேலும் பொதுமக்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படாமல் இருக்கவும், அசம்பாவிதம் நடைபெறாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நேற்று கடையநல்லூரில் போலீசாரின் கொடி அணிவகுப்பு ஊர்வலம் நடைபெற்றது. கடையநல்லூர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி முன்பு இருந்து ஊர்வலம் தொடங்கி, கொல்லம்- திருமங்கலம் சாலை வழியாக கொல்லம், சேர்ந்தமரம் சாலை, இக்பால் நகர், கலந்தர் மஸ்தான் தெரு, அட்டக்குளம் தெரு வழியாக சென்று மணிக்கூண்டில் முடிவடைந்தது.
இதில் இன்ஸ்பெக்டர்கள் கோவிந்தன் (கடையநல்லூர்), அலெக்ஸ் (புளியங்குடி), சப்- இன்ஸ்பெக்டர்கள் விஜய்குமார் (கடையநல்லூர்), வேல்பாண்டி (சொக்கம்பட்டி), முகைதீன் பிச்சை (புளியங்குடி), தினேஷ் பாபு (சேர்ந்தமரம்) உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story