செரியலூர் இனாம் கிராமத்தில் குளம் தூர்வாரும் பணியை பொதுமக்கள் தொடங்கினர்


செரியலூர் இனாம் கிராமத்தில் குளம் தூர்வாரும் பணியை பொதுமக்கள் தொடங்கினர்
x
தினத்தந்தி 7 Dec 2019 10:30 PM GMT (Updated: 7 Dec 2019 6:37 PM GMT)

செரியலூர் இனாம் கிராமத்தில் பல ஆண்டுகளாக தூர்வாரப்படாத குளத்தை, பொதுமக்கள் தூர்வாரினர்.

கீரமங்கலம்,

கீரமங்கலம் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் உள்ள குளங்கள், ஏரிகள் மழைபெய்யும் போது, சங்கிலித் தொடராக நிரம்பும். ஒவ்வொரு கிராமத்திலும் உள்ள நீர்நிலைகள் முழுமையாக நிரம்பிய பிறகு வடிகால் மூலம் அடுத்த கிராமத்தில் உள்ள நீர்நிலைகளுக்கு செல்லும்.

இதேபோல தான் கீரமங்கலத்தில் உள்ள குளங்கள் நிறைந்து அருகில் உள்ள செரியலூர் இனாம் கிராமத்தில் உள்ள அய்யன் குளம் நிரம்பிய பிறகு மீண்டும் காட்டாற்றில் கலக்கும். இந்த குளங்கள் பல ஆண்டுகளாக தூர்வாரப்படாததால் தண்ணீர் இன்றி சீமை கருவேல மரங்கள் அடர்ந்து காணப்படுகிறது.

இளைஞர்கள்

இந்நிலையில் செரியலூர் கிராமத்தில் கல்லணை தண்ணீரை பாசனத்திற்கு கொண்டு வரும் வாய்க்காலை உள்ளூர் இளைஞர்களும், பொதுமக்களும் தூர்வாரினர். இதைக்கண்ட கைபா அமைப்பினர் பல ஆண்டுகளாக தூர் வாரப்படாமல் சீமைக் கருவேல மரங்கள் அடர்ந்துள்ள அய்யன் குளத்தை நாங்கள் மராமத்து செய்து தருகிறோம் எனக்கூறினார்கள். இந்த தகவல் அறிந்து மில்கி மிஸ்ட் டைரி நிறுவனத்தை சேர்ந்த சதீஷ்குமார் என்ற இளைஞர் செரியலூர் அய்யன் குளம் தூர்வாரும் பணிக்கான செலவு தொகையை ஏற்றுக் கொண்டார்.

அதன் பிறகு கிராமத்தினர் முன்னிலையில் தூர்வாரும் பணி பூமி பூஜையுடன் தொடங்கியது. பல ஆண்டுகளாக தூர்வாரப்படாமல் கிடந்த குளத்தை தூர் வாரியதற்க்கு கிராம மக்கள் பாராட்டு தெரிவித்தனர்.

Next Story