மாவட்ட செய்திகள்

மேலூர் அருகே, ஒரு தலையாக காதலித்த வாலிபரின் தொல்லையால் இளம்பெண் தற்கொலை - 5 பேர் கைது + "||" + Near Melur, By the harassment of the beloved youth as a one side love young lady Suicide Five arrested

மேலூர் அருகே, ஒரு தலையாக காதலித்த வாலிபரின் தொல்லையால் இளம்பெண் தற்கொலை - 5 பேர் கைது

மேலூர் அருகே, ஒரு தலையாக காதலித்த வாலிபரின் தொல்லையால் இளம்பெண் தற்கொலை - 5 பேர் கைது
ஒரு தலையாக காதலித்த வாலிபரின் தொல்லையால் மனமுடைந்த இளம்பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
மேலூர், 

மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள தும்பைப்பட்டியை சேர்ந்தவர் சேவுகன். இவரது மகள் திவ்யா(வயது 21). இவரை அதே ஊரை சேர்ந்த சின்னழகு என்பவரின் மகன் அஜித்(25) ஒரு தலையாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்தநிலையில் திவ்யாவுக்கு அவரது பெற்றோர் வேறு இடத்தில் திருமண ஏற்பாடுகள் செய்தனர். ஆனால் அஜித் மற்றும் அவரது உறவினர்கள் சிலர்் திவ்யாவின் திருமண ஏற்பாட்டிற்கு இடையூறு செய்து வந்ததாக தெரியவருகிறது.

இதனால் மனமுடைந்த திவ்யா, விஷம் குடித்து மயங்கி விழுந்தார். அவரை மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்்சைக்காக சேர்த்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் இறந்தார்.

இதுகுறித்து மேலூர் அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து அஜித், அவரது தந்தை சின்னழகு(49) மற்றும் உறவினர்கள் பஞ்சு, சித்ரா, ஆதினமிளகி ஆகிய 5 பேரை கைது செய்தனர் .

தொடர்புடைய செய்திகள்

1. சுஷாந்த் சிங் ராஜ்புத் தற்கொலைக்கு முன் வலியில்லா மரணத்திற்கு மருந்து தேடி உள்ளார் - போலீஸ் கமிஷனர்
நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் தற்கொலைக்கு முன் கூகுளில் வலியில்லா மரணத்திற்கு மருந்து தேடி உள்ளார் என மும்பை போலீஸ் கமிஷனர் கூறி உள்ளார்.
2. பெண் என்ஜினீயர் தற்கொலை வழக்கில் கணவர் கைது வரதட்சணை கொடுமையால் உயிரை மாய்த்த சோகம்
சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் பெண் என்ஜினீயர் தற்கொலை வழக்கில் வரதட்சணை கொடுமையின் கீழ் அவரது கணவரை போலீசார் கைது செய்தனர்.
3. தென்காசியில் குளத்தில் குதித்து மாணவர் தற்கொலை பெற்றோர் திட்டியதால் விபரீத முடிவு
தென்காசியில் பெற்றோர் திட்டியதால் பள்ளி மாணவர் ஒருவர் குளத்தில் குதித்து தற்கொலை செய்து கொண்டார்.
4. ஆன்லைன் விளையாட்டில் பணத்தை இழந்ததால் கல்லூரி மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை உருக்கமான கடிதம் சிக்கியது
தான் சேமித்து வைத்த பணத்தை ஆன்லைன் விளையாட்டில் இழந்ததால் விரக்தி அடைந்த கல்லூரி மாணவர், தூக்குப்போட்டு தற்கொலை செய்தார். அவர் எழுதிய உருக்கமான கடிதம் போலீசாரிடம் சிக்கியது.
5. திருமணமான 4 மாதத்தில் புதுமாப்பிள்ளை தூக்குப்போட்டு தற்கொலை
குடும்ப பிரச்சினை காரணமாக திருமணமான 4 மாதத்தில் புதுமாப்பிள்ளை தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.