மாவட்ட செய்திகள்

சிறுவனை அடித்துக்கொன்று குப்பைக்கிடங்கில் உடலை புதைத்த வழக்கு: அ.தி.மு.க. முன்னாள் கவுன்சிலர் மகன் உள்பட 5 பேர் கைது + "||" + Case of beating a boy and burying his body in a garbage can Five arrested, including son of former councilor

சிறுவனை அடித்துக்கொன்று குப்பைக்கிடங்கில் உடலை புதைத்த வழக்கு: அ.தி.மு.க. முன்னாள் கவுன்சிலர் மகன் உள்பட 5 பேர் கைது

சிறுவனை அடித்துக்கொன்று குப்பைக்கிடங்கில் உடலை புதைத்த வழக்கு: அ.தி.மு.க. முன்னாள் கவுன்சிலர் மகன் உள்பட 5 பேர் கைது
திருச்சி அரியமங்கலத்தில் சிறுவனை அடித்துக்கொன்று குப்பை கிடங்கில் உடலை புதைத்த வழக்கில் அ.தி.மு.க. முன்னாள் கவுன்சிலரின் மகன் உள்பட 5 பேரை போலீசார் கைது செய்தனர்.
பொன்மலைப்பட்டி,

திருச்சி அரியமங்கலம் மேலஅம்பிகாபுரம் அண்ணாநகரைச் சேர்ந்தவர் அலியார். இவருடைய மகன் அப்துல்வாஹித் (வயது 12). 6-ம் வகுப்பு படித்து வந்த இவன் சமீபகாலமாக பள்ளிக்கு செல்லவில்லை. இந்தநிலையில் கடந்த 3-ந்தேதி வீட்டில் இருந்து வெளியே சென்ற சிறுவன், பின்னர் வீடு திரும்பவில்லை.


பல்வேறு இடங்களில் தேடியும் அவன் கிடைக்காததால், சிறுவனின் தந்தை கடந்த 6-ந்ேததி அரியமங்கலம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். அப்போது, சிறுவன் அப்துல் வாஹித், அதே பகுதியை சேர்ந்த அ.தி.மு.க. முன்னாள் கவுன்சிலர் கயல்விழி என்பவரின் முத்த மகன் முத்துக்குமார்(26) மற்றும் 18 வயது இளையமகன் ஆகியோருடன் சுற்றித்திரிந்தது தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து போலீசார் முத்துக்குமாரை பிடித்து விசாரணை நடத்தினார்கள். விசாரணையில், முத்துக்குமார் வளர்த்து வந்த பன்றிகளை அவருடைய பெரியப்பா மகன் பிடித்து விற்பனை செய்து வந்ததும், இதற்கு சிறுவன் அப்துல் வாஹித் உடந்தையாக இருந்ததும், அதனால் ஏற்பட்ட ஆத்திரத்தில், சிறுவன் அப்துல்வாஹித் வந்தால் அவனை பிடித்து கட்டி வைக்கும் படி, தனது நண்பர்கள் சரவணன்(19) மற்றும் 16 வயதுடைய 3 சிறுவர்களிடம் முத்துக்குமார் கூறியதும் தெரியவந்தது.

இந்தநிலையில், கடந்த 3-ந்் தேதி மாலை முத்துக்குமாரின் பன்றி பண்ணைக்கு சென்ற அப்துல்வாஹித்திடம் சரவணன் மற்றும் 3 சிறுவர்கள் சேர்ந்து பிரச்சினை செய்துள்ளனர். அப்போது, அவர்கள் அடித்ததில் சிறுவன் அப்துல்வாஹித் சம்பவ இடத்திலேயே இறந்துள்ளான். பின்னர் 4 பேரும் சேர்ந்து அவனுடைய உடலை, அரியமங்கலத்தில் உள்ள குப்பை கிடங்கில் உள்ள கழிவுநீர் தொட்டியில் போட்டு புதைத்ததும் தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து குப்பைக்கிடங்கில் இருந்து, சிறுவன் அப்துல்வாஹித்தின் உடலை போலீசார் தோண்டி எடுத்து பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும் சிறுவன் மாயமான வழக்கை, கொலை வழக்காக போலீசார் மாற்றம் செய்தனர். பின்னர், இதுதொடர்பாக முத்துக்குமார், சரவணன் மற்றும் 3 சிறுவர்கள் என்று 5 பேரை கைது செய்தனர். இதில் முத்துக்குமாரின் தந்தை சேகர் பிரபல ரவுடியாக இருந்தவர் என்றும், இவர் முன்விரோதம் காரணமாக உறவினரால் கொலை செய்யப்பட்டதாகவும் போலீசார் கூறினார்கள்.


தொடர்புடைய செய்திகள்

1. கடற்கரையில் பிணமாக கிடந்தவர் வழிப்பறி கொள்ளையன்: சம்பந்தமே இல்லாமல் போலீசில் மாட்டிவிட்டதால் கொலை வாலிபர் கைது
திருவொற்றியூர் கடற்கரையில் பிணமாக கிடந்தவர் வழிப்பறி கொள்ளையன் என தெரிந்தது. சம்பந்தமே இல்லாமல் போலீசில் மாட்டிவிட்டதால் அவரை கொலை செய்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.
2. ரூ.1,500 கொடுத்தால் 2 மணி நேரத்தில் இ-பாஸ் வாங்கி தருவதாக வாட்ஸ்-அப்பில் பதிவிட்ட வேலூர் வாலிபர் கைது
ரூ.1,500 கொடுத்தால் 2 மணி நேரத்தில் இ-பாஸ் வாங்கி தருவதாக வாட்ஸ்-அப்பில் பதிவிட்ட வேலூரை சேர்ந்த வாலிபர் கைது செய்யப்பட்டார். இதில் சம்பந்தப்பட்ட வடிவேல் என்பவரை பிடிக்க தனிப்படையினர் திருப்பூர் விரைந்துள்ளனர்.
3. மூதாட்டியிடம் தாலி சங்கிலி பறிப்பு: ரூ.1¾ லட்சத்துக்கு அடமானம் வைத்த வாலிபர் கைது
ஊத்துக்கோட்டை அருகே மூதாட்டியிடம் பறித்த 8 பவுன் தாலி சங்கிலியை வங்கியில் அடமானம் வைத்த வாலிபர் கைதானார்.
4. கொரோனா தொற்று குறித்த புள்ளிவிவரங்களை மாவட்ட வாரியாக வெளியிட கோரி தி.மு.க. எம்.எல்.ஏ. வழக்கு
கொரோனா வைரஸ் தொற்று குறித்த முழுமையான புள்ளி விவரங்களை மாவட்ட வாரியாக வெளியிட கோரி தி.மு.க., எம்.எல்.ஏ., தொடர்ந்த வழக்கிற்கு பதில் அளிக்கும்படி தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
5. 111 பேரை பலி கொண்ட விஷ சாராய வழக்கின் முக்கிய புள்ளி கைது
பஞ்சாபில் 111 பேரை பலி கொண்ட விஷ சாராய வழக்கில் தேடப்பட்டு வந்த முக்கிய நபர் போலீசாரால் கைது செய்யப்பட்டு உள்ளார்.