மாவட்ட செய்திகள்

தர்மபுரி அருகே, வாகனம் மோதி அரசு பள்ளி ஆசிரியர் சாவு + "||" + Near Dharmapuri, The vehicle collided The death of a government school teacher

தர்மபுரி அருகே, வாகனம் மோதி அரசு பள்ளி ஆசிரியர் சாவு

தர்மபுரி அருகே, வாகனம் மோதி அரசு பள்ளி ஆசிரியர் சாவு
தர்மபுரி அருகே மோட்டார் சைக்கிள் மீது வாகனம் மோதிய விபத்தில் அரசு பள்ளி ஆசிரியர் பரிதாபமாக இறந்தார்.
தர்மபுரி,

தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே உள்ள பொடுத்தம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் ராமகிருஷ்ணன் (வயது 55). இவர் புலியூர் பகுதியில் உள்ள அரசு பள்ளியில் பகுதி நேர ஆசிரியராக பணிபுரிந்து வந்தார். இவர் அதே பகுதியை சேர்ந்த சின்னவன் என்பவருடன் மோட்டார் சைக்கிளில் தர்மபுரி நோக்கி வந்து கொண்டிருந்தார்.

தர்மபுரி அருகே சங்கம்பட்டி பகுதியில் வந்தபோது அந்த வழியாக சென்ற ஒரு வாகனம் மோட்டார்சைக்கிள் மீது மோதி விட்டு நிற்காமல் சென்றது. இந்த விபத்தில் ராமகிருஷ்ணன், சின்னவன் ஆகிய 2 பேரும் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தனர். அவர்களை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக தர்மபுரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

பின்னர் ராமகிருஷ்ணனை மேல் சிகிச்சைக்கு சேலம் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். படுகாயம் அடைந்த சின்னவனுக்கு தீவிர சிகிச்ைச அளிக்கப்படுகிறது. இந்த விபத்து குறித்து மதிகோன்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


தொடர்புடைய செய்திகள்

1. லாரி மோதி விபத்து: மோட்டார் சைக்கிளில் சென்ற தையல் தொழிலாளி சாவு - மகள் கண் எதிரே பரிதாபம்
கும்பகோணத்தில் லாரி மோதி மோட்டார் சைக்கிளில் சென்ற தையல் தொழிலாளி, மகள் கண் எதிரே பரிதாபமாக இறந்தார். இந்த விபத்தில் படுகாயம் அடைந்த மகளுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
2. வாணியம்பாடியில், மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்து வாலிபர் பலி; நண்பர் படுகாயம்
வாணியம்பாடியில் மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்ததில் வாலிபர் பரிதாபமாக உயிரிழந்தார்.
3. மோட்டார்சைக்கிள் மீது லாரி மோதி பள்ளி மாணவி பலி - உறவினர்கள் சாலைமறியல்
கெலமங்கலம் அருகே மோட்டார்சைக்கிள் மீது லாரி மோதி பள்ளி மாணவி உடல் நசுங்கி உயிரிழந்தாள். இதனால் ஆத்திரம் அடைந்த உறவினர்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர்.
4. செஞ்சி அருகே, மோட்டார் சைக்கிள் மீது கார் மோதல்; தனியார் நிறுவன ஊழியர் சாவு - கிராம மக்கள் சாலை மறியல்
செஞ்சி அருகே மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் தனியார் நிறுவன ஊழியர் பரிதாபமாக இறந்தார். விபத்துக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
5. கார் மோதி தனியார் தொழிற்சாலை ஊழியர் பலி
பெரம்பலூர் புறநகர், துறைமங்கலம் நான்குசாலை சந்திப்பு அருகே உள்ள சிலோன் காலனியை சேர்ந்தவர் கந்தசாமி. இவரது மகன் முத்துகுமார்(வயது 39).