தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடத்த முயற்சி தமிழர் விடுதலை களத்தினர் 75 பேர் கைது
தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடத்த முயற்சி செய்த தமிழர் விடுதலை களத்தினர் 75 பேரை போலீசார் கைது செய்தனர்.
புளியங்குடி,
சுதந்திர போராட்ட வீரர் வெண்ணிகாலாடியின் நினைவு தினத்தை அரசு விழாவாக கொண்டாட வேண்டும், அவருக்கு சிலையுடன் கூடிய மணிமண்டபம் அமைக்க வேண்டும் என வலியுறுத்தி புளியங்குடியில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என தமிழர் விடுதலை களம் அறிவித்திருந்தது. ஆனால் ஆர்ப்பாட்டம் நடத்துவதற்கு போலீசார் தடை விதித்தனர்.
இந்தநிலையில் புளியங்குடி பஸ்நிலையம் அருகே அவர்கள் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்த முயன்றனர். தகவல் அறிந்ததும் புளியங்குடி போலீசார் விரைந்து வந்தனர். தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடத்த முயன்றதாக தமிழர் விடுதலை களம் மாநில தலைவர் ராஜ்குமார், துணை தலைவர் சாமி, தென்காசி மாவட்ட செயலாளர் சுரேஷ் பாண்டியன், ஒருங்கிணைப்பாளர்கள் சேகர், முத்துப்பாண்டி, ஜெயராஜ் உள்ளிட்ட 75 பேரை கைது செய்தனர்.
Related Tags :
Next Story