அரியலூர் மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தல் நடத்தை விதிகளை கண்காணிக்க 9 பறக்கும் படை குழுக்கள்


அரியலூர் மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தல் நடத்தை விதிகளை கண்காணிக்க 9 பறக்கும் படை குழுக்கள்
x
தினத்தந்தி 19 Dec 2019 11:00 PM GMT (Updated: 19 Dec 2019 2:46 PM GMT)

அரியலூர் மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தல் நடத்தை விதிமுறைகளை கண்காணிக்க 9 பறக்கும் படை குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது என்று தேர்தல் மேற்பார்வையாளர் ராஜசேகர் கூறினார்.

அரியலூர்,

உள்ளாட்சி தேர்தலையொட்டி அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தின் முதல் தளத்தில் அமைக்கப்பட்டுள்ள தேர்தல் கட்டுப்பாட்டு அறையை, மாவட்டத்திற்கான தேர்தல் பார்வையாளர் ராஜசேகர், கலெக்டர் ரத்னாவுடன் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அவர் கூறியதாவது:-

அரியலூர் மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி பகுதிகளில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் மீறல் தொடர்பான புகார்களை தேர்தல் கட்டுப்பாட்டு அறைக்கு 04329-228165 என்ற தொலைபேசி எண்ணிலும், கட்டணமில்லா தொலைபேசி எண் 1077 என்ற எண்ணிலும், வாட்ஸ்-அப் எண் 8220241351 என்ற எண்ணிலும் பொதுமக்கள் தெரிவிக்கலாம். அந்த புகார்கள் உடனுக்குடன் பதிவு செய்யப்பட்டு, அவற்றின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும், பதிவு செய்யப்பட வேண்டும். பெறப்படும் புகார்கள் பற்றி குறிப்பிட்ட ஒன்றியத்திற்கு உட்பட்ட பறக்கும் படை குழுவினருக்கு கட்டுப்பாட்டு அறையில் இருந்து தகவல் தெரிவிக்கப்பட்டு, விசாரணைகளின் அடிப்படையில் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

பறக்கும் படை குழுக்கள்

மேலும், தேர்தல் நடத்தை விதிமுறைகளை கண்காணிக்க அரியலூர் மாவட்டத்தில் அரியலூர், திருமானூர் ஒன்றியங்களுக்கு சுழற்சி முறையில் 3 பறக்கும் படைக்குழுக்கள், ஜெயங்கொண்டம், தா.பழூர் ஒன்றியங்களுக்கு சுழற்சி முறையில் 3 பறக்கும் படை குழுக்கள், செந்துறை, ஆண்டிமடம் ஒன்றியங்களுக்கு சுழற்சி முறையில் 3 பறக்கும் படை குழுக்கள் என மொத்தம் 9 பறக்கும் படை குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

அரியலூர், திருமானூர் ஒன்றியங்களுக்கு காலை 7 மணி முதல் மதியம் 2 மணி வரை செயல்படும் பறக்கும் படைக்குழுவிற்கு 7397389956 என்ற எண்ணிற்கும், மதியம் 2 மணி முதல் இரவு 9 மணி வரை செயல்படும் பறக்கும் படைக்குழுவிற்கு 9790371939 என்ற எண்ணிற்கும், இரவு 9 மணி முதல் காலை 7 மணி வரை செயல்படும் பறக்கும் படைக்குழுவிற்கு 9442817255 என்ற எண்ணிற்கும் தேர்தல் விதிமீறல்கள் தொடர்பான புகார்களை பொதுமக்கள் தெரிவிக்கலாம். ஜெயங்கொண்டம், தா.பழூர் ஒன்றியங்களுக்கு காலை 7 மணி முதல் மதியம் 2 மணி வரை செயல்படும் பறக்கும் படைக்குழுவிற்கு 9500609574 என்ற எண்ணிற்கும், மதியம் 2 மணி முதல் இரவு 9 மணி வரை செயல்படும் பறக்கும் படைக்குழுவிற்கு 7904570882 என்ற எண்ணிற்கும், இரவு 9 மணி முதல் காலை 7 மணி வரை செயல்படும் பறக்கும் படை குழுவிற்கு 8946041820 என்ற எண்ணிற்கும் தேர்தல் விதிமீறல்கள் தொடர்பான புகார்களை பொதுமக்கள் தெரிவிக்கலாம்.

புகார் தெரிவிக்கலாம்

செந்துறை, ஆண்டிமடம் ஒன்றியங்களுக்கு காலை 7 மணி முதல் மதியம் 2 மணி வரை செயல்படும் பறக்கும் படைக்குழுவிற்கு 7598720601 என்ற எண்ணிற்கும், மதியம் 2 மணி முதல் இரவு 9 மணி வரை செயல்படும் பறக்கும் படைக்குழுவிற்கு 7373353042 என்ற எண்ணிற்கும், இரவு 9 மணி முதல் காலை 7 மணி வரை செயல்படும் பறக்கும் படைக்குழுவிற்கு 9443399525 என்ற எண்ணிற்கும் தேர்தல் விதிமீறல்கள் தொடர்பான புகார்களை பொதுமக்கள் தெரிவிக்கலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.

ஆய்வின்போது திட்ட இயக்குனர்கள் சுந்தரராஜன் (மாவட்ட ஊரக வளர்ச்சி திட்டம்), ஜெயராமன் (மகளிர் திட்டம்), உதவி இயக்குனர் (ஊராட்சிகள்) பழனிச்சாமி, கட்டுப்பாட்டு அறை பொறுப்பு அலுவலர் சரண்யா மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.

Next Story