திருக்கோவிலூரில் நடுரோட்டில் வெடித்து சிதறிய நாட்டுவெடிகள் மர்மநபருக்கு போலீஸ் வலைவீச்சு
திருக்கோவிலூரில் நடுரோட்டில் நாட்டுவெடிகள் வெடித்து சிதறியது. இது தொடர்பாக மர்மநபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
திருக்கோவிலூர்,
கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூர் 4 முனை சந்திப்பு பகுதியில் மோட்டார் சைக்கிளில் மர்மநபர் ஒருவர் சென்று கொண்டிருந்தார். அப்போது அவர் எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிளுடன் தவறி கீழே விழுந்தார். இதில் மோட்டார் சைக்கிளின் பின்புறத்தில் கட்டிவைக்கப்பட்டிருந்த பெட்டியில் பதுக்கி வைத்திருந்த நாட்டுவெடிகள் நடுரோட்டில் விழுந்தன. அப்போது அந்த வழியாக வந்த லாரி நடுரோட்டில் விழுந்த நாட்டுவெடி மீது ஏறி இறங்கியது. இதில் அந்த வெடிகள் வெடித்து சிதறியது. இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் அலறியடித்து அங்கிருந்து ஓடினர். இதனிடையே மோட்டார் சைக்கிளை அங்கேயே போட்டுவிட்டு மர்ம நபர் அங்கிருந்து தப்பிச்சென்றார்.
வலைவீச்சு
இது குறித்த தகவலின் பேரில் திருக்கோவிலூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். பின்னர் ரோட்டில் வெடிக்காமல் சிதறி கிடந்த சில நாட்டுவெடிகளை கைப்பற்றி அதனை செயல் இழக்க செய்தனர். மேலும் மர்ம நபர் விட்டு சென்ற மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்தனர். இதையடுத்து வயல்வெளிகளில் பயிர்களை நாசம் செய்யும் காட்டுபன்றிகளை வேட்டையாடு வதற்காக நாட்டுவெடிகள் கொண்டு செல்லப்பட்டதா? அல்லது வேறு ஏதேனும் காரணத்துக்காக கொண்டு செல்லப்பட்டதா ? என போலீசார் விசாரணை நடத்தி வருவதோடு, தப்பிஓடிய மர்ம நபரை வலைவீசி தேடி வருகின்றனர்.

Related Tags :
Next Story