எரிசாராயம் கடத்திய வழக்கு: 3 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது கிருஷ்ணகிரி கலெக்டர் நடவடிக்கை
எரிசாராயம் கடத்திய வழக்கில் கைதான 3 பேர் மீதும் குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுத்து கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் பிரபாகர் உத்தரவிட்டுள்ளார்.
கிருஷ்ணகிரி,
அரியானா மாநிலத்தில் இருந்து கடந்த மாதம் 14-ந் தேதி கிருஷ்ணகிரி வழியாக சென்னைக்கு எரிசாராயம் கடத்தப்படுவதாக மது விலக்கு அமல் பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து கிருஷ்ணகிரியில் மதுவிலக்கு அமல் பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணரவி மற்றும் போலீசார் கண்காணிப்பு பணியை மேற்கொண்டனர்.
திப்பனப்பள்ளி கூட்டு ரோடு அருகில் அவர்கள் வாகன சோதனையில் ஈடுபட்ட போது ஓசூரில் இருந்து கிருஷ்ணகிரி நோக்கி வந்த லாரியை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் 35 லிட்டர் கொள்ளளவு கொண்ட 340 கேன்களில் மொத்தம் 11 ஆயிரத்து 900 லிட்டர் மதிப்புள்ள எரிசாராயம் கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
3 பேர் கைது
இதைத் தொடர்ந்து ரூ.10 லட்சம் மதிப்புள்ள எரிசாராயத்தையும், லாரியையும் போலீசார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக எரிசாராயத்தை கடத்தி வந்த விழுப்புரம் மாவட்டம் கூட்டேரிப்பட்டியை சேர்ந்த அய்யனார் என்கிற பாலசந்திரன் (வயது 36), கோவிந்தசாமி (43) ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
அவர்கள் கொடுத்த தகவலின் பேரில், எரிசாராயம் கடத்த மூளையாக செயல்பட்ட செங்கல்பட்டு மாவட்டம் பெரிய விரிஞ்சம்பாக்கம் சிங்க பெருமாள் கோவில் தெருவை சேர்ந்த ராஜேந்திரன் (50) என்பவரையும் போலீசார் கைது செய்தனர்.
குண்டர் சட்டம் பாய்ந்தது
கைதான 3 பேரையும் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க கிருஷ்ணகிரி மது விலக்கு அமல் பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவண ரவி, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பண்டி கங்காதருக்கு பரிந்துரை செய்தார்.
இதைத் தொடர்ந்து போலீஸ் சூப்பிரண்டின் பரிந்துரையை ஏற்று, அய்யனார் என்கிற பாலசந்திரன், கோவிந்தசாமி, ராஜேந்திரன் ஆகிய 3 பேரையும் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் பிரபாகர் உத்தரவிட்டார்.

Related Tags :
Next Story