புத்தாண்டையொட்டி சுற்றுலா பயணிகள் படையெடுப்பு ஓட்டல்கள், விடுதிகளில் போலீசார் சோதனை


புத்தாண்டையொட்டி சுற்றுலா பயணிகள் படையெடுப்பு ஓட்டல்கள், விடுதிகளில் போலீசார் சோதனை
x
தினத்தந்தி 29 Dec 2019 4:15 AM IST (Updated: 29 Dec 2019 2:47 AM IST)
t-max-icont-min-icon

புதுச்சேரியில் புத்தாண்டு கொண்டாட சுற்றுலா பயணிகள் குவிந்து வருவதால் தங்கும் விடுதிகள், ரிசார்ட்டுகளில் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர்.

பாகூர்,

புத்தாண்டு பிறக்க இன்னும் 3 நாட்களே உள்ள நிலையில் தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா ஆகிய மாநிலங்களை சேர்ந்த இளைஞர்கள், அரசு அதிகாரிகள் மற்றும் தொழிலதிபர்கள் புதுச்சேரியில் உள்ள சுற்றுலாத் தலங்களை பார்வையிடவும், புத்தாண்டை கொண்டாடவும் வந்த வண்ணம் உள்ளனர்.

இதையொட்டி புதுச்சேரி நகரமே திக்குமுக்காடி வருகிறது. விடுதிகள் அனைத்தும் நிரம்பி வழிகின்றன. அதனால் பெரும்பாலான ஓட்டல்களில் அறை கிடைக்காத நிலை இருந்து வருகிறது.

இதனால் புறநகர் பகுதியான அரியாங்குப்பம், தவளக்குப்பம், கிருமாம்பாக்கம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள உயர்தர ஓட்டல்கள் மற்றும் ரிசார்ட்டுகளுக்கு சுற்றுலா பயணிகள் படையெடுத்து வந்த வண்ணம் உள்ளனர்.

போலீசார் அதிரடி

இந்த நிலையில் அசம்பாவித சம்பவங்களை தடுக்கும் வகையில் பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொள்ள போலீசாருக்கு சீனியர் போலீஸ் சூப்பிரண்டு ராகுல் அல்வால் உத்தரவிட்டுள் ளார்.அதன்பேரில் பாகூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கவுதம் சிவ கணேஷ் தலைமையில் கிருமாம்பாக்கம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தன்வந்திரி உதவி சப்-இன்ஸ்பெக்டர் ராஜமாணிக்கம் மற்றும் போலீசார் நேற்று இரவு புறநகர் பகுதியில் உள்ள தங்கும் விடுதிகள், ரிசார்ட்டுகளில் அதிரடி சோதனை நடத்தினார்கள். அங்குள்ள பதிவேடுகளை ஆய்வு செய்தனர். விடுதிகளில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்கள் செயல்படுகிறதா? என்றும் ஆய்வு செய்தனர். விடுதிக்கு வருபவர்களில் சந்தேகத்துக்கிடமான நபர்கள் பற்றி தெரியவந்தால் உடனடியாக போலீசுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்று விடுதி மற்றும் ரிசார்ட் ஊழியர்களிடம் அறிவுறுத்தி உள்ளனர்.


Next Story