மாவட்ட செய்திகள்

தேர்தல் பணிக்கு சென்ற தலைமை ஆசிரியை வீட்டில் 30 பவுன் நகை-ரூ.50 ஆயிரம் திருட்டு + "||" + Headmaster who went to election work Theft of 30 pounds of jewelry at home - Rs

தேர்தல் பணிக்கு சென்ற தலைமை ஆசிரியை வீட்டில் 30 பவுன் நகை-ரூ.50 ஆயிரம் திருட்டு

தேர்தல் பணிக்கு சென்ற தலைமை ஆசிரியை வீட்டில் 30 பவுன் நகை-ரூ.50 ஆயிரம் திருட்டு
தேர்தல் பணிக்கு சென்ற தலைமை ஆசிரியை வீட்டின் கதவை உடைத்து 30 பவுன் நகை மற்றும் ரூ.50 ஆயிரத்தை திருடி சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
கரூர்,

கரூர் அருகே உள்ள காந்திகிராமம், ராகவேந்திராநகர் தமிழ்நாடு அரசு வீட்டு வசதி வாரிய குடியிருப்பை சேர்ந்தவர் முத்தையா. இவருடைய மனைவி செல்சிடோனி பாக்கியஜோதி (47). இவர் தாந்தோணி ஒன்றியம் பூ.வடுகப்பட்டி அரசு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் தலைமை ஆசிரியையாக பணியாற்றி வருகிறார்.


இந்த நிலையில், செல்சிடோனி பாக்கியஜோதி சென்னையில் உள்ள அண்ணன் மகன் திருமணத்திற்கு செல்வதற்காக, வங்கியில் அடகு வைத்திருந்த 30 பவுன் நகையை திருப்பி வீட்டில் வைத்திருந்தார். இந்நிலையில் செல்சிடோனி பாக்கியஜோதிக்கு தேர்தல் பணி ஒதுக்கப்பட்டு இருந்ததால், அவரது கணவர் திருமண ஏற்பாடுகளை கவனிக்க முன்கூட்டியே சென்று விட்டார்.

நகை-பணம் திருட்டு

கடந்த 29-ந்தேதி செல்சிடோனி பாக்கியஜோதி வீட்டை பூட்டி விட்டு உள்ளாட்சி தேர்தல் பணிக்காக தோைகமலை சென்று விட்டு நள்ளிரவில் வீட்டுக்கு வந்தார்.அப்போது, வீட்டின் கதவு உடைந்து கிடந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் வீட்டுக்குள் சென்று பார்த்தபோது, பீரோ திறந்து கிடந்தது.

பீரோவில் உள்ள பொருட்கள் சிதறி கிடந்தன. அதில் வைக்கப்பட்டு இருந்த 30 பவுன் நகைகள் மற்றும் ரூ.50 ஆயிரம் ஆகியவை திருடப்பட்டு இருந்தது. தேர்தல் பணிக்கு சென்றதை நோட்டமிட்டு மர்ம நபர்கள் இந்த துணிகர திருட்டில் ஈடுபட்டுள்ளனர். இது குறித்து செல்சிடோனி பாக்கியஜோதி தாந்தோணிமலை போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். அதன் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் சரவணன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். மோப்பநாய் ரோசி வரவழைக்கப்பட்டு சம்பவ இடத்தை மோப்பம் பிடித்ததவாறு சிறிது தூரம் ஓடி நின்றது, யாரையும் கவ்விபிடிக்கவில்லை. மேலும் இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து நகை-பணத்தை திருடி சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். தேர்தல் பணிக்கு சென்ற தலைமை ஆசிரியை வீட்டில் நகை-பணம் திருட்டுப்போன சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


தொடர்புடைய செய்திகள்

1. சீல் வைக்கப்பட்ட அரிசி ஆலையில் ரூ.10 லட்சம் எந்திரங்கள் திருட்டு - உரிமையாளர் உள்பட 2 பேர் மீது வழக்கு
வங்கி கடனை திரும்ப செலுத்தாததால் சீல் வைக்கப்பட்ட அரிசி ஆலையில், ரூ.10 லட்சம் மதிப்புள்ள எந்திரங்களை ஆலையின் உரிமையாளர் மற்றும் அவரது நண்பர் திருடிச்சென்றனர். அவர்கள் மீது போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
2. கோ.பூவனூர் வரதராஜ பெருமாள் கோவில் பூட்டை உடைத்து திருட்டு - மர்மநபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு
விருத்தாசலம் அருகே கோ. பூவனூர் வரதராஜ பெருமாள் கோவிலில் பூட்டை உடைத்து திருடிய மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
3. கண்டமங்கலம் அருகே மணல் திருட்டில் ஈடுபட்டவர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது
விழுப்புரம் அருகே மணல் திருட்டில் ஈடுபட்டவரை குண்டர் தடுப்பு சட்டத்தில் போலீசார் கைது செய்தனர்.
4. சேலத்தில், கள்ளச்சாவி போட்டு மளிகைக்கடையில் ரூ.1½ லட்சம் திருட்டு - தந்தை, மகன் கைது
சேலத்தில் கள்ளச்சாவி போட்டு மளிகைக்கடையில் ரூ.1½ லட்சம் திருடிய தந்தை, மகனை போலீசார் கைது செய்தனர்.
5. எசனையில் அடுத்தடுத்து 7 வீடுகளில் திருட்டு - மர்மநபர்களுக்கு போலீசார் வலைவீச்சு
எசனை கிராமத்தில் அடுத்தடுத்து 7 வீடுகளில் திருடிய மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.