மாவட்ட செய்திகள்

மாநகராட்சி தேர்தலிலும் தி.மு.க. - காங்கிரஸ் கூட்டணி மகத்தான வெற்றி பெறும் கார்த்தி சிதம்பரம் பேட்டி + "||" + DMK may also be involved in corporation elections - Interview with Karthi Chidambaram, Congress congress winner

மாநகராட்சி தேர்தலிலும் தி.மு.க. - காங்கிரஸ் கூட்டணி மகத்தான வெற்றி பெறும் கார்த்தி சிதம்பரம் பேட்டி

மாநகராட்சி தேர்தலிலும் தி.மு.க. - காங்கிரஸ் கூட்டணி மகத்தான வெற்றி பெறும் கார்த்தி சிதம்பரம் பேட்டி
மாநகராட்சி தேர்தலிலும் தி.மு.க. - காங்கிரஸ் கூட்டணி மகத்தான வெற்றி பெறும் என கார்த்தி சிதம்பரம் கூறினார்.
திருத்துறைப்பூண்டி,

குடியுரிமை சட்ட திருத்த மசோதாவிற்கு எதிராக மாணவர்கள், அரசியல் கட்சியினர் என பல தரப்பு மக்களும் போராடி வருகின்றனர். இந்த போராட்டம் இன்னும் தொடர்ந்து கொண்டு தான் இருக்கும்.

குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு அ.தி.மு.க. ஆதரவாக தான் செயல்படுகிறது. அவர்கள் தமிழகத்தில் ஒரு பேச்சும், டெல்லியில் ஒரு பேச்சும் பேசி வருகின்றனர். அ.தி.மு.க. அரசால் சுயமாக செயல்பட முடியவில்லை. ஒரே ரே‌‌ஷன் கார்டு திட்டம் ஒரு தவறான முடிவு. இதனை மாநில அரசு தான் முடிவு செய்ய வேண்டும்.


மகத்தான வெற்றி

நாடாளுமன்ற தேர்தல் மற்றும் சட்டமன்ற தேர்தல் ஒரே கட்டங்களாக நடைபெறும் போது உள்ளாட்சி தேர்தலை மட்டும் ஏன்? இரண்டு கட்டங்களாக நடத்தினார்கள் என்பது புரியவில்லை.

அவ்வாறு நடத்தியும் தி.மு.க. மற்றும் காங்கிரஸ் கூட்டணி தான் வெற்றி பெற்றுள்ளது. அதேபோல வருகிற நகராட்சி மற்றும் மாநகராட்சி தேர்தலிலும் தி.மு.க. - காங்கிரஸ் கூட்டணியே மகத்தான வெற்றி பெறும். அதேபோல் வருகிற சட்ட மன்ற தேர்தலிலும் தி.மு.க. கூட்டணி வெற்றி பெறும்.

இவ்வாறு அவர் கூறினார்.

முன்னதாக அவர் வேளாங்கண்ணி பேராலயத்திற்கு சென்று பிரார்த்தனை செய்தார்.


தொடர்புடைய செய்திகள்

1. ‘தமிழகத்தின் மேம்பாட்டுக்காக நானும், ரஜினியும் பேசிக்கொண்டு இருக்கிறோம்’ - தேர்தல் முன்னோட்ட அறிக்கையை வெளியிட்டு கமல்ஹாசன் பேட்டி
தமிழகத்தின் மேம்பாட்டுக்காக தானும், ரஜினிகாந்தும் பேசிக்கொண்டு இருப்பதாகவும், கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தை நடப்பதற்கான வாய்ப்புகள் இருப்பதாகவும் தேர்தல் முன்னோட்ட அறிக்கையை வெளியிட்ட பின்னர் கமல்ஹாசன் தெரிவித்தார்.
2. டெல்லி வன்முறைக்கு பொறுப்பேற்று மோடி, அமித்ஷா பதவி விலக வேண்டும் தொல். திருமாவளவன் பேட்டி
டெல்லி வன்முறைக்கு பொறுப்பேற்று மோடி, அமித்ஷா பதவி விலக வேண்டும் என்று நாகர்கோவிலில் தொல்.திருமாவளவன் எம்.பி. கூறினார்.
3. குடியுரிமை திருத்த சட்ட ஆதரவு பேரணியால் கலவரத்தை தூண்ட பா.ஜ.க.வினர் திட்டமிடுகிறார்கள் கி.வீரமணி பேட்டி
குடியுரிமை திருத்த சட்ட ஆதரவு பேரணியால், தமிழகத்தில் கலவரத்தை தூண்ட பா.ஜ.க.வினர் திட்டமிடுகிறார்கள் என கி.வீரமணி கூறினார்.
4. திருவாரூரில், 7-ந் தேதி நடைபெறும் பாராட்டு விழாவில் முதல்-அமைச்சருக்கு பட்டம் வழங்கப்படும் ரங்கநாதன் பேட்டி
திருவாரூரில், வருகிற 7-ந் தேதி நடைபெறும் பாராட்டு விழாவில் முதல்-அமைச்சருக்கு பட்டம் வழங்கப்படும் என்று மன்னார்குடி ரங்கநாதன் கூறினார்.
5. இந்தியா தோல்வி; உலகம் ஒன்றும் முடிந்து விடவில்லை: விராட் கோலி பேட்டி
டெஸ்ட் போட்டியில் இந்திய அணி தோல்வி அடைந்த நிலையில் உலகம் ஒன்றும் முடிந்து விடவில்லை என விராட் கோலி பேட்டியளித்து உள்ளார்.