மாவட்ட செய்திகள்

நடிகை தீபிகா படுகோனேக்கு பா.ஜனதா கண்டனம் + "||" + BJP condemns actress Deepika Padukone

நடிகை தீபிகா படுகோனேக்கு பா.ஜனதா கண்டனம்

நடிகை தீபிகா படுகோனேக்கு பா.ஜனதா கண்டனம்
ஜே.என்.யு. மாணவர்கள் போராட்டத்தில் பங்கேற்ற நடிகை தீபிகா படுகோனேக்கு பாரதீய ஜனதா கண்டனம் தெரிவித்துள்ளது.
மும்பை, 

டெல்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்திற்குள் (ஜே.என்.யு) முகமூடி அணிந்து நுழைந்த நபர்கள், அங்கிருந்த மாணவர்கள், ஆசிரியர்கள் மீது கடுமையான தாக்குதல் நடத்தியதில் 20-க்கும் மேற்பட்டவர்கள் படுகாயமடைந்தனர்.

இந்த சம்பவத்தை கண்டித்து நாடு முழுவதும் போராட்டம் நடந்து வருகிறது. அந்த பல்கலைக்கழகத்திற்கு சென்ற நடிகை தீபிகா படுகோனே அங்கு நடந்த மாணவர்கள் போராட்டத்தில் கலந்து கொண்டு ஆதரவு தெரிவித்தார். இதனால் அவருக்கு பல்வேறு தரப்பில் இருந்தும் ஆதரவும், எதிர்ப்பும் எழுந்து வருகிறது.

இந்தநிலையில் மராட்டிய பாரதீய ஜனதாவை சேர்ந்த முன்னாள் மந்திரி ஆசிஸ் செலார் கூறியதாவது:-

சஞ்சய் லீலா பன்சாலி போன்ற இயக்குனர் உங்கள் பின்னால் இருக்கும்போது, வீரமிக்க போர் வீராங்கனை மஸ்தானியின் கதாபாத்திரத்தில் நடிப்பது எளிது. ஆனால் நிஜ வாழ்க்கையில் பின்னால் ஒரு இயக்குனர் இல்லாதபோது, தீபிகா படுகோனே தன்னை ஒரு போர் வீராங்கனை அல்லது மஸ்தானி என்று சித்தரிக்க முயற்சிக்கக்கூடாது. ஏனென்றால் அவரால் அந்த மாதிரியான வாழ்க்கையை உண்மையில் வாழ முடியாது.

ஜே.என்.யு.வில் தாக்குதலுக்கு ஆளான ஒருசாராரை மட்டும் அவர் நேரில் சென்று சந்தித்து தனது உணர்ச்சியற்ற தன்மையை காட்டியுள்ளார். ஒரு தரப்பினரை மட்டும் சந்தித்ததன் மூலம் அவர் வெளிப்படையாக சிக்கலில் இருக்கிறார். நாங்கள் அவருடைய செயலை கண்டிக்கிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

1. தீபிகா படுகோனேவின் மத்திய அரசு விளம்பர படம் நிறுத்தம்?
டெல்லியில் ஜவகர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர்கள் தாக்கப்பட்ட சம்பவத்துக்கு நடிகை தீபிகா படுகோனே எதிர்ப்பு தெரிவித்ததுடன் பல்கலைக்கழகத்துக்கே நேரில் சென்று மாணவர்கள் நடத்திய போராட்டத்தில் கலந்து கொண்டார்.
2. மாணவர்கள் போராட்டத்தில் பங்கேற்ற தீபிகா படுகோனே படத்துக்கு எதிர்ப்பு
டெல்லியில் ஜவகர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர்கள் தாக்கப்பட்ட சம்பவத்துக்கு டாப்சி, கியூமா குரோசி, சுவரா பாஸ்கர், தியா மிர்சா, சோனம் கபூர், அலியா பட், சோனாக்சி சின்ஹா உள்ளிட்ட பல நடிகைகள் கண்டனம் தெரிவித்தனர்.
3. தீபிகா படுகோனே - அலியாபட் மோதல்
மும்பையில் நடந்த திரைப்பட நேர்காணல் நிகழ்ச்சியொன்றில் பங்கேற்க கணவர் ரன்வீர் சிங்குடன் தீபிகா படுகோனே சென்று இருந்தார். இதில் விஜய் தேவரகொண்டா, அலியாபட் உள்பட மேலும் சில நட்சத்திரங்கள் பங்கேற்றனர்.
4. தீபிகா படுகோனேவை உலுக்கிய கதாபாத்திரம்
டெல்லியை சேர்ந்த லட்சுமி அகர்வால் என்ற பெண்ணை குட்டா என்பவர் தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி வற்புறுத்தினார். அதற்கு லட்சுமி அகர்வால் மறுத்ததால் அவர் முகத்தில் திராவகம் வீசினார்.