லிங்கசுகூரு அருகே கிராமத்திற்குள் புகுந்த முதலை; பீதியடைந்த கிராம மக்கள் கற்களை வீசி தாக்கினர்


லிங்கசுகூரு அருகே கிராமத்திற்குள் புகுந்த முதலை; பீதியடைந்த கிராம மக்கள் கற்களை வீசி தாக்கினர்
x
தினத்தந்தி 10 Jan 2020 10:30 PM GMT (Updated: 10 Jan 2020 6:22 PM GMT)

ராய்ச்சூர் மாவட்டத்தில் கிருஷ்ணா நதி ஓடுகிறது. நேற்று காலையில் ராய்ச்சூர் மாவட்டம் லிங்கசுகூரு தாலுகா கிருஷ்ணா நதிக்கரையில் அமைந்துள்ள நரகலதின்னி கிராமத்திற்குள் முதலை ஒன்று புகுந்தது.

ராய்ச்சூர், 

முதலை அந்த கிராமத்தைச் சேர்ந்த விவசாயி ஒருவரின் மாட்டு கொட்டகையில் தஞ்சம் அடைந்தது. இதுபற்றி அறிந்த அந்த விவசாயியும், கிராம மக்களும் கூடலே வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்த வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அதற்குள் அந்த முதலை அங்கிருந்து சில அடி தூரம் நகர்ந்தது.

அப்போது பீதியடைந்த கிராம மக்கள் கற்களை வீசி அந்த முதலையை தாக்கினர். இதில் அந்த முதலை லேசான காயம் அடைந்தது. பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர் அந்த முதலையை லாவகமாக உயிருடன் பிடித்து வனப்பகுதியில் விட்டனர். இதுபற்றி வனத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

பிடிபட்ட முதலையை வனப்பகுதியில் விட்டு விட்டோம். அது இரையை தேடி நதியில் இருந்து கரைக்கு வந்து கிராமத்தில் புகுந்திருக்கும். அதிர்ஷ்டவசமாக அந்த முதலையால் கிராம மக்கள் யாருக்கும் தொந்தரவு ஏற்படவில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story