விழுப்புரம்- கள்ளக்குறிச்சி ஒருங்கிணைந்த மாவட்டத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 2-ம் கட்ட சிறப்பு முகாம்


விழுப்புரம்- கள்ளக்குறிச்சி ஒருங்கிணைந்த மாவட்டத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 2-ம் கட்ட சிறப்பு முகாம்
x
தினத்தந்தி 12 Jan 2020 3:45 AM IST (Updated: 12 Jan 2020 1:31 AM IST)
t-max-icont-min-icon

விழுப்புரம்- கள்ளக்குறிச்சி ஒருங்கிணைந்த மாவட்டத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 2-ம் கட்ட சிறப்பு முகாம் 3,227 வாக்குச்சாவடி மையங்களில் நடைபெற்றது.

விழுப்புரம்,

விழுப்புரம், கள்ளக்குறிச்சி ஒருங்கிணைந்த மாவட்டத்தில் 1.1.2020-ஐ தகுதி நாளாக கொண்டு வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க திருத்தப்பணிகள் கடந்த மாதம் 23-ந் தேதி தொடங்கியது. இப்பணிகள் வருகிற 22-ந் தேதி வரை நடைபெறுகிறது.

இதனிடையே வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்காக முதல்கட்டமாக கடந்த 4, 5-ந் தேதிகளில் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டது.

இதன் தொடர்ச்சியாக நேற்று 2-ம் கட்டமாக சிறப்பு முகாம் நடந்தது. அதன்படி விழுப்புரம், கள்ளக்குறிச்சி ஒருங்கிணைந்த மாவட்டத்தில் உள்ள 3,227 வாக்குச்சாவடி மையங்களில் இந்த சிறப்பு முகாம்கள் நடைபெற்றது.

காலை 9.30 மணிக்கு தொடங்கி மாலை 5.30 மணி வரை நடைபெற்ற இந்த முகாம்களில் ஏராளமான பொதுமக்கள் கலந்துகொண்டு வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கம், திருத்தம், முகவரி மாற்றம் உள்ளிட்ட பணிகள் தொடர்பாக உரிய ஆவணங்களுடன் கோரிக்கை மனுக்களை அந்தந்த வாக்குச்சாவடி நிலை அலுவலர்களிடம் கொடுத்தனர்.

Next Story