மாவட்ட செய்திகள்

சட்ட கல்லூரி மாணவிக்கு ஆபாச படங்கள் அனுப்பிய வாலிபா் கைது + "||" + College of Law female Student ku Sent porn pictures youth Arrested

சட்ட கல்லூரி மாணவிக்கு ஆபாச படங்கள் அனுப்பிய வாலிபா் கைது

சட்ட கல்லூரி மாணவிக்கு ஆபாச படங்கள் அனுப்பிய வாலிபா் கைது
போரிவிலியில் சட்ட கல்லூரி மாணவிக்கு ஆபாச படங்கள் அனுப்பிய வாலிபரை போலீசார் கைது செய்தனர். இதேபோல அந்தேரியில் வீடியோ கால் செய்து பெண்ணுக்கு தொல்லை கொடுத்தவரும் சிக்கினார்
மும்பை, 

மும்பை போரிவிலி பகுதியை சேர்ந்த 23 வயது சட்ட கல்லூரி மாணவிக்கு கடந்த சில மாதங்களுக்கு முன், ஒருவர் வாட்ஸ்-அப்பில் ஆபாச படங்களை அனுப்பினார். இதனால் எரிச்சல் அடைந்த மாணவி அந்த நபரை எச்சரித்தார். அப்போது அவர் மாணவியை கற்பழித்துவிடுவேன் என மிரட்டினார்.

இதுகுறித்து மாணவி போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து நடத்திய விசாரணையில், மாணவிக்கு ஆபாச படம் அனுப்பி தொல்லை கொடுத்தது ஆமதாபாத்தை சேர்ந்த மீட் சோனி (வயது 19) என்பது தெரியவந்தது. இதையடுத்து ஆமதாபாத் சென்ற போலீசார் அவரை கைது செய்தனர்.

இதேபோல மும்பை அந்தேரி பகுதியை சேர்ந்த இளம்பெண்ணுக்கு கடந்த மாதம் முன்பின் தெரியாத ஒருவரிடம் இருந்து வாட்ஸ்-அப்பில் வீடியோ கால் வந்தது. இளம்பெண் அந்த காலை எடுத்து பேசினார். அப்போது வீடியோ கால் செய்த நபர் இளம்பெண் முன் ஆபாச செயலில் ஈடுபட்டார். இதனால் எரிச்சல் அடைந்த இளம்பெண் வெர்சோவா போலீசில் புகார் அளித்தார்.

அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பெண்ணுக்கு வீடியோ கால் செய்த காவலாளி சுதாகர் காசிடேவை (30) கைது செய்தனர்.

தொடர்புடைய செய்திகள்

1. இன்ஸ்டாகிராம் குழுவில் ஆபாச கருத்து- சிறுமிகளின் ஆபாச படங்களை வெளியிட்ட பிளஸ் 1 மாணவர்கள்
இன்ஸ்டாகிராம் குழுவில் பாயிஸ் லாக்கர் ரூம் குழுவில் ஆபாச கருத்துக்களுடன் சிறுமிகளின் ஆபாச படங்களை அனுமதியின்றி வெளியிட்ட மாணவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

ஆசிரியரின் தேர்வுகள்...