தொழிலாளி குத்திக்கொலை: ‘தங்கையை திருமணம் செய்ய வற்புறுத்தியதால் குத்திக் கொன்றேன்’ - கைதான வாலிபர் பரபரப்பு வாக்குமூலம்


தொழிலாளி குத்திக்கொலை: ‘தங்கையை திருமணம் செய்ய வற்புறுத்தியதால் குத்திக் கொன்றேன்’ - கைதான வாலிபர் பரபரப்பு வாக்குமூலம்
x
தினத்தந்தி 17 Jan 2020 10:30 PM GMT (Updated: 17 Jan 2020 7:28 PM GMT)

பள்ளிபாளையம் அருகே தொழிலாளி கொலை வழக்கில் கைதான வாலிபர் பரபரப்பு வாக்கு மூலம் அளித்துள்ளார். அதில் தங்கையை திருமணம் செய்ய வற்புறுத்தியதால் குத்திக்கொன்றதாக தெரிவித்துள்ளார்.

பள்ளிபாளையம்,

பள்ளிபாளையம் எலந்தகுட்டை அருகே நேற்று முன்தினம் இரவு வெப்படையை சேர்ந்த லேத் பட்டறை தொழிலாளி விக்னே‌‌ஷ் (வயது 19) என்பவர் உடலில் பல இடங்களில் கத்தியால் குத்தப்பட்டு கொலை செய்யப்பட்டு கிடந்தார். இதுகுறித்து பள்ளிபாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சாந்தமூர்த்தி தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர்கள் முருகேசன், யுவராஜ் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கொன்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வந்தனர்.

மேலும் திருச்செங்கோடு துணை போலீஸ் சூப்பிரண்டு சண்முகம் தலைமையிலும் விசாரணை நடத்தப்பட்டு வந்தது. இந்தநிலையில் வெப்படை பகுதியை சேர்ந்த மற்றொரு விக்னேஷ் (25) என்பவரை கொலைவழக்கில் போலீசார் கைது செய்தனர். இதையடுத்து அவர் போலீசாரிடம் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

கொலையான விக்னேசும், நானும் நண்பர்கள். கடந்த சில நாட்களாக பட்டறையில் வேலை பார்த்து வந்த விக்னேஷ், தனது தங்கையை திருமணம் செய்ய சொல்லி என்னை வற்புறுத்தி வந்தார். இது எனக்கு பிடிக்கவில்லை, இதனால் நான் ஆத்திரத்தில் இருந்தேன். இந்தநிலையில் சம்பவத்தன்று எனக்கும், தொழிலாளியான விக்னேசுக்கும் தகராறு ஏற்பட்டது. இதனால் நான் அவரை கத்தியால் குத்திக்கொலை செய்தேன்.

இவ்வாறு அவர் வாக்கு மூலம் அளித்துள்ளார்.

இதையடுத்து கைதான விக்னேசை போலீசார் திருச்செங்கோடு கோர்ட்டில் ஆஜர்படுத்தி சேலம் சிறையில் அடைத்தனர்.

Next Story