ஆட்சி பொறுப்பேற்று 100 நாள் ஆனவுடன் உத்தவ் தாக்கரே அயோத்தி செல்வார் சஞ்சய் ராவத் தகவல்


ஆட்சி பொறுப்பேற்று 100 நாள் ஆனவுடன்   உத்தவ் தாக்கரே அயோத்தி செல்வார்   சஞ்சய் ராவத் தகவல்
x
தினத்தந்தி 23 Jan 2020 4:00 AM IST (Updated: 23 Jan 2020 2:37 AM IST)
t-max-icont-min-icon

ஆட்சி பொறுப்பேற்று 100 நாள் ஆனவுடன் முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே அயோத்தி செல்வார் என சிவசேனா எம்.பி. சஞ்சய் ராவத் கூறியுள்ளார்.

மும்பை, 

முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 24-ந் தேதி உத்தரபிரதேசத்தில் உள்ள அயோத்திக்கு செல்வதாக இருந்தது. ஆனால் மராட்டியத்தில் நடந்த அரசியல் பூகம்பத்தால் அவரது பயணம் ரத்து செய்யப்பட்டது.

இந்தநிலையில் ஆட்சி பொறுப்பேற்று 100 நாள் ஆனவுடன் உத்தவ் தாக்கரே அயோத்தி செல்வார் என சிவசேனா எம்.பி. சஞ்சய் ராவத் தெரிவித்து உள்ளார்.

இது குறித்து அவர் டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்ப தாவது:-

ராமரின் ஆசி

அரசு செயல்பட்டு கொண்டு இருக்கிறது. ராமரின் ஆசியால் இந்த அரசு 5 ஆண்டுகளை பூர்த்தி செய்யும். ஆட்சி பொறுப்பேற்று 100 நாள் ஆனவுடன் ராமரின் அருள்வேண்டி உத்தவ் தாக்கரே அயோத்தி செல்வார். மேலும் அங்கு அவரது எதிர்கால திட்டங்கள் குறித்தும் கூறுவார்.

இவ்வாறு சஞ்சய் ராவத் கூறியுள்ளாா்.

உத்தவ் தாக்கரே கடைசியாக அவரது கட்சியின் 18 எம்.பி.க்களுடன் கடந்த ஆண்டு ஜூன் மாதம் அயோத்திக்கு சென்று இருந்தார். அப்போது விரைவில் ராமர் கோவில் கட்ட வேண்டும் என்று வலியுறுத்தினார்.

Next Story