உயரழுத்த மின்கம்பி அறுந்ததால் 1 மணி நேரம் மின்சார ரெயில் சேவை பாதிப்பு


உயரழுத்த மின்கம்பி அறுந்ததால்   1 மணி நேரம் மின்சார ரெயில் சேவை பாதிப்பு
x
தினத்தந்தி 23 Jan 2020 4:15 AM IST (Updated: 23 Jan 2020 2:40 AM IST)
t-max-icont-min-icon

உயரழுத்த மின்கம்பி அறுந்ததால் மேற்கு ரெயில்வே வழித்தடத்தில் 1 மணி நேரம் மின்சார ரெயில் சேவை பாதிக்கப்பட்டது. இதனால் பயணிகள் அவதி அடைந்தனர்.

மும்பை,

மும்பையில் மேற்கு ரெயில்வே சர்ச்கேட்- விராா் இடையே மின்சார ரெயில்களை இயக்கி வருகிறது. நேற்று பகல் 12.30 மணியளவில் மிரா ரோடு- தகிசர் இடையே விரைவு ரெயில் வழித்தட உயரழுத்த மின் கம்பி அறுந்து (ஓவர்ஹெட் வயர்) விழுந்தது. இதனால் மேற்கு ரெயில்வே வழித்தடத்தில் இயக்கப்பட்ட விரைவு மின்சார ரெயில்கள் ஆங்காங்கே நடுவழியில் நிறுத்தப்பட்டன.

இதுபற்றி தகவல் அறிந்து சென்ற ரெயில்வே ஊழியர்கள் அறுந்து விழுந்த மின் கம்பியை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டனர்.

பயணிகள் அவதி

இந்த சமயத்தில் மேற்கு ரெயில்வே வழித்தடத்தில் வந்த விரைவு மின்சார ரெயில்கள், ஸ்லோ வழித்தடத்தில் திருப்பிவிடப்பட்டன. இதன் காரணமாக மேற்கு ரெயில்வே வழித்தட பயணிகள் கடும் அவதி அடைந்தனர்.

இது குறித்து மேற்கு ரெயில்வே மக்கள் தொடர்பு அதிகாரி ரவீந்திர பாய்கர் கூறுகையில், ‘‘உயரழுத்த மின் கம்பி அறுந்ததால் மின்சார ரெயில்கள் தாமதமாக இயக்கப்பட்டன. சில சேவைகள் ரத்து செய்யப்பட்டன. பகல் 1.30 மணி அளவில் அறுந்து விழுந்த உயரழுத்த மின்கம்பி சரிசெய்யப்பட்டு ரெயில் சேவை சீரானது’’ என்றாா்.

Next Story