சிறுமிக்கு பாலியல் தொல்லை; வாலிபர் கைது


சிறுமிக்கு பாலியல் தொல்லை; வாலிபர் கைது
x
தினத்தந்தி 2 Feb 2020 3:00 AM IST (Updated: 2 Feb 2020 2:19 AM IST)
t-max-icont-min-icon

சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.

கன்னியாகுமரி, 

கன்னியாகுமரி அருகே கொட்டாரம் குலசேகரம்புரத்தை சேர்ந்த மரிய செல்வம் மகன் அஜய் (வயது 25). இவர் 17 வயதுடைய சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தாக தெரிகிறது. இதுகுறித்து சிறுமி தாயாரிடம் கூறி அழுதார்.

சிறுமியின் தாயார் கன்னியாகுமரி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அந்த புகாரின் பேரில் போலீசார், 

அஜய் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.

Next Story