மாவட்ட செய்திகள்

மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதி விவசாயி பலி + "||" + Motorcycles collide face to face; farmer kills

மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதி விவசாயி பலி

மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதி விவசாயி பலி
ஜோலார்பேட்டை அருகே மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதியதில் விவசாயி பலியானார்.
ஜோலார்பேட்டை, 

ஜோலார்பேட்டை அருகே மண்டலவாடி அண்ணா நகரை சேர்ந்தவர் முத்து (வயது 60), விவசாயி. இவர் நேற்று குன்னத்தூர் நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த மற்றொரு மோட்டார் சைக்கிள் இவரது மோட்டார்சைக்கிள் மீது நேருக்கு நேர் மோதியது.

இதில் முத்து, மற்றொரு மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்த மண்டலவாடியை சேர்ந்த லட்சுமணன் ஆகிய 2 பேரும் படுகாயம் அடைந்தனர். அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் 2 பேரையும் மீட்டு, சிகிச்சைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு முத்துவை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறினர். லட்சுமணனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து ஜோலார்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.


தொடர்புடைய செய்திகள்

1. திருமானூர் அருகே பரிதாபம்: தாய்-சேய் நல வாகனம் மோதி 2 வாலிபர்கள் பலி
திருமானூர் அருகே தாய்-சேய் நல வாக னம் மோதியதில் 2 வாலிபர்கள் பரிதாப மாக இறந்தனர்.
2. சாலை தடுப்பு கட்டையில் மோட்டார் சைக்கிள் மோதியது: சினிமா துணை இயக்குனர் பலி - உளுந்தூர்பேட்டையில் சம்பவம்
உளுந்தூர்பேட்டையில் சாலை தடுப்பு கட்டையில் மோட்டார் சைக்கிள் மோதியதில், சினிமா துணை இயக்குனர் பலியானார்.
3. வெள்ளியணை அருகே கிணற்றில் மூழ்கி 2 மாணவர்கள் பலி தண்ணீர் குடிக்க சென்றபோது பரிதாபம்
வெள்ளியணை அருகே தண்ணீர் குடிக்க சென்றபோது பள்ளி மாணவர்கள் 2 பேர் கிணற்றில் மூழ்கி பரிதாபமாக இறந்தனர்.
4. பழனி அருகே யானை மிதித்து முதியவர் பலி உடலை டோலி கட்டி தூக்கி வந்த பரிதாபம்
பழனி அருகே முதியவரை யானை மிதித்து கொன்றது. அவரது உடலை டோலி கட்டி வனத்துறையினர் தூக்கி வந்தனர்.
5. லாரி–மோட்டார்சைக்கிள் மோதலில் தொழிலாளி பலி ; லிப்டு கேட்டுச்சென்ற 2 வாலிபர்கள் படுகாயம்
சோளிங்கர் அருகே லாரி–மோட்டார்சைக்கிள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் தொழிலாளி பலியானார். மேலும் 2 பேர் படுகாயம் அடைந்தனர்.