மாவட்ட செய்திகள்

மன்னார்குடியில், பெண்ணிடம் நகை திருடிய 2 பேர் கைது - 7 பவுன் மீட்பு + "||" + In Mannarkudi, Woman Stolen Jewelry 2 arrested - 7 Pound Recovery

மன்னார்குடியில், பெண்ணிடம் நகை திருடிய 2 பேர் கைது - 7 பவுன் மீட்பு

மன்னார்குடியில், பெண்ணிடம் நகை திருடிய 2 பேர் கைது - 7 பவுன் மீட்பு
மன்னார்குடியில் பெண்ணிடம் நகை திருடிய 2 பேரை போலீசார் கைது செய்து, அவர்களிடம் இருந்து 7 பவுன் நகையை மீட்டனர்.
மன்னார்குடி, 

மன்னார்குடியை சேர்ந்தவர் அனுசுயா (வயது22). இவர் கடந்த மாதம் 12-ந்தேதி தனது உறவினர் திருமண விழாவிற்கு தஞ்சாவூருக்கு வந்தார். பின்னர் மீண்டும் பஸ்சில் ஏறி மன்னார்குடிக்கு வந்தார். அதனை தொடர்ந்து மன்னார்குடி பஸ் நிலையத்தில் இறங்கினார். அப்போது கையில் வைத்திருந்த நகை பையை காணவில்லை. இதுகுறித்து அனுசுயா மன்னார்குடி போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

இந்தநிலையில் கடந்த சிலநாட்களுக்கு முன்பு நீடாமங்கலம் பகுதியில் ஒரு சங்கிலி பறிப்பு வழக்கில் மயிலாடுதுறையை சேர்ந்த ராம்கி(26), விக்னே‌‌ஷ்(24) ஆகிய 2 பேரை நீடாமங்கலம் போலீசார் கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.

இதையடுத்து மன்னார்குடி போலீசார் திருச்சி மத்திய சிறைக்கு சென்று ராம்கி, விக்னே‌‌ஷ் ஆகிய 2 பேரை மன்னார்குடிக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் அனுசுயாவிடம் இருந்து 7 பவுன் நகையை திருடி சென்றதை ஒப்புக்கொண்டனர். இதையடுத்து போலீசார் அவர்களிடம் இருந்து 7 பவுன் நகையை மீட்டனர். இதனையடுத்து மன்னார்குடி போலீசார் 2 பேரை கைது செய்து குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர் செய்து திருச்சி மத்திய சிறைக்கு கொண்டு சென்றனர்.

தொடர்புடைய செய்திகள்

1. வீட்டில் வைத்து சாராயம் விற்றவர் உள்பட 2 பேர் கைது - காரைக்காலில் போலீசார் அதிரடி
காரைக்காலில் வீட்டில் வைத்து சாராய பாக்கெட்டுகள் தயாரித்து விற்றவர் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
2. தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. வேலுச்சாமி வீட்டில் வெடிகுண்டு வெடிக்க செய்த 2 பேர் கைது - கோர்ட்டில் ஒருவர் சரண்
தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. வேலுச்சாமியின் வீட்டில் வெடிகுண்டு வெடிக்க செய்த 2 பேர் கைது செய்யப்பட்டனர். ஒருவர் கோர்ட்டில் சரண் அடைந்தார்.
3. திரிசூலத்தில் விற்க முயன்ற கிருஷ்ணர் சிலை மீட்பு 2 பேர் கைது
திரிசூலத்தில் விற்பனைக்காக மறைத்து வைத்து இருந்த கிருஷ்ணர் சிலையை மீட்ட சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார், இது தொடர்பாக 2 பேரை கைது செய்தனர்.
4. மோட்டார் சைக்கிளை திருடி பதிவு எண்ணை மாற்றி ஓட்டிய 2 பேர் கைது - போலீசாரின் வாகன சோதனையில் சிக்கினர்
மோட்டார் சைக்கிளை திருடி பதிவு எண்ணை மாற்றி ஓட்டி வந்த 2 பேர் வாகன சோதனையினால் சிக்கினர்.
5. நகைகளை திருடிய சிறுவன் உள்பட 2 பேர் கைது; 80 பவுன் நகை மீட்பு
பெரம்பலூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் நகைகளை திருடியதாக சிறுவன் உள்பட 2 பேரை தனிப்படை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்த 80 பவுன் நகைகளை போலீசார் மீட்டனர்.