மாவட்ட செய்திகள்

ஆத்தூர் அருகே, விஷம் குடித்து பெண் தற்கொலை + "||" + Woman commit suicide by drinking poison

ஆத்தூர் அருகே, விஷம் குடித்து பெண் தற்கொலை

ஆத்தூர் அருகே, விஷம் குடித்து பெண் தற்கொலை
ஆத்தூர் அருகே குடும்ப தகராறு காரணமாக மனமுடைந்த பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
ஆறுமுகநேரி,

தூத்துக்குடி மாவட்டம் ஆத்தூரை அடுத்த முக்காணி ராமச்சந்திரபுரத்தைச் சேர்ந்தவர் முருகன். விவசாயி. இவருடைய மனைவி ஆறுமுககனி (வயது 36). இவர்களுக்கு 2 மகன்கள், ஒரு மகள் உள்ளனர். இவர்கள் அங்குள்ள பள்ளிக்கூடத்தில் படித்து வருகின்றனர்.

இந்த நிலையில் கடந்த சில நாட்களாக கணவன்-மனைவி இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்தது. இதனால் மனமுடைந்த ஆறுமுககனி நேற்று முன்தினம் மாலையில் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் திடீரென்று பூச்சிக்கொல்லி மருந்தை குடித்து மயங்கி விழுந்து உயிருக்கு போராடினார்.

உடனே அவருக்கு ஆத்தூர் தனியார் ஆஸ்பத்திரியில் முதலுதவி சிகிச்சை அளித்து, மேல் சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனாலும் சிகிச்சை பலனின்றி நேற்று காலையில் ஆறுமுககனி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்த புகாரின்பேரில், ஆத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

1. மகன்கள் மீதான தாக்குதலை தட்டிக்கேட்ட பெண் அடித்து கொலை அவினாசி அருகே பயங்கரம்
அவினாசி அருகே கிரிக்கெட் விளையாட்டின்போது மகன்களை தாக்கியவர்களை தட்டி கேட்க சென்ற பெண் அடித்து கொலை செய்யப்பட்டார்.
2. கடலூர் மாவட்டத்தில் கொரோனாவுக்கு பெண் பலி 14 போலீசாருக்கு தொற்று உறுதி
கடலூர் மாவட்டத்தில் கொரோனாவுக்கு பெண் ஒருவர் பலியானார். மேலும் 14 போலீசாருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
3. எலவனாசூர்கோட்டை அருகே தறிகெட்டு ஓடிய மினிலாரி கவிழ்ந்து பெண் பலி 36 பேர் படுகாயம்
எலவனாசூர்கோட்டை அருகே டயர் வெடித்ததில் தறிகெட்டு ஓடிய மினிலாரி கவிழ்ந்ததில் பெண் பலியானார். மேலும் இந்த விபத்தில் 36 பேர் படுகாயம் அடைந்தனர்.
4. கருங்கல்லை தூக்கி தலையில் போட்டு பெண் கொலை விரக்தியில் கணவனும் தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு
சொந்த ஊருக்கு வர, மனைவி மறுத்ததால் ஆத்திரம் அடைந்த கட்டிட தொழிலாளி, ஜோலார்பேட்டை அருகே வீட்டில் தூங்கி கொண்டிருந்த மனைவியின் தலையில் கருங்கல்லை தூக்கி போட்டு கொலை செய்தார். விரக்தியில் அதே கருங்கல்லை தனது தலையிலும், உடலிலும் தாக்கி கொண்டு தொழிலாளி தற்கொலைக்கு முயன்றார்.
5. டிரோன் மூலம் நடத்திய தேடுதல் வேட்டை: முந்திரித்தோப்பில் சாராயம் காய்ச்சிய பெண் கைது
டிரோன் கேமரா மூலமாக நடத்திய தேடுதல் வேட்டையில் முந்திரித் தோப்பில் சாராயம் காய்ச்சிய பெண் கைது செய்யப்பட்டார். தப்பி ஓடிய அவரது கணவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.