325 மாணவ-மாணவிகளுக்கு இலவச சைக்கிள் செல்வமோகன்தாஸ் பாண்டியன் எம்.எல்.ஏ. வழங்கினார்


325 மாணவ-மாணவிகளுக்கு இலவச சைக்கிள் செல்வமோகன்தாஸ் பாண்டியன் எம்.எல்.ஏ. வழங்கினார்
x
தினத்தந்தி 11 Feb 2020 9:56 PM GMT (Updated: 11 Feb 2020 9:56 PM GMT)

மேலப்பாவூர், 325 மாணவ-மாணவிகளுக்கு இலவச சைக்கிள் செல்வமோகன்தாஸ் பாண்டியன் எம்.எல்.ஏ. வழங்கினார்.

பாவூர்சத்திரம்,

மேலப்பாவூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் தமிழக அரசின் இலவச சைக்கிள்கள் வழங்கும் விழா நடைபெற்றது. பள்ளி தலைமை ஆசிரியர் மாடசாமி தலைமை தாங்கினார். நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் செந்தமிழ்அரசு வரவேற்றார். செல்வமோகன்தாஸ் பாண்டியன் எம்.எல்.ஏ. கலந்துகொண்டு 125 மாணவ-மாணவிகளுக்கு இலவச சைக்கிள்களை வழங்கினார். விழாவில் அ.தி.மு.க. ஒன்றிய செயலாளர் அமல்ராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர். ஆசிரியர் சுரேஷ் நன்றி கூறினார்.

இதேபோல் பாவூர்சத்திரம் அருகே உள்ள அயன்குறும்பலாப்பேரி அரசு மேல்நிலைப்பள்ளியில் மாணவ-மாணவிகள் 40 பேருக்கு இலவச சைக்கிள்களையும், பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளையும் செல்வமோகன்தாஸ் பாண்டியன் எம்.எல்.ஏ. வழங்கினார். பள்ளி தலைமை ஆசிரியர் வெங்கடேசன் வரவேற்றார். நிகழ்ச்சியில் ஆசிரியர்கள் அந்தோணி ஜெய்சிங், சுகுமார், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் இளமதி உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். பாவூர்சத்திரத்தில் உள்ள த.பி.சொக்கலால் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற விழாவுக்கு பள்ளி தலைமை ஆசிரியர் சதீஷ் கிங்ஸ்லி தலைமை தாங்கினார். செல்வமோகன்தாஸ் பாண்டியன் எம்.எல்.ஏ. 160 மாணவர்களுக்கு இலவச சைக்கிள்களை வழங்கினார். முடிவில் ஆசிரியர் லட்சுமிகாந்தன் நன்றி கூறினார்.

Next Story