மாவட்ட செய்திகள்

சென்னை விமான நிலையத்தில் கேட்பாரற்று கிடந்த மர்ம பையால் வெடிகுண்டு பீதி + "||" + At the Chennai airport Bomb Panic

சென்னை விமான நிலையத்தில் கேட்பாரற்று கிடந்த மர்ம பையால் வெடிகுண்டு பீதி

சென்னை விமான நிலையத்தில்  கேட்பாரற்று கிடந்த மர்ம பையால் வெடிகுண்டு பீதி
சென்னை விமான நிலையத்தில் கேட்பாரற்று கிடந்த மர்ம பையால் அதில் வெடிகுண்டு இருக்குமோ? என்ற பீதி ஏற்பட்டது.
ஆலந்தூர், 

சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்தில் வாகனங்கள் நிறுத்தும் இடத்தில் டிராலியில் பை ஒன்று கேட்பாரற்று கிடந்தது. நீண்டநேரம் ஆகியும் அந்த பையை எடுக்க யாரும் வரவில்லை. இதனால் அந்த பையில் வெடிகுண்டு இருக்குமோ? என்ற பீதி ஏற்பட்டது. இதுபற்றி விமான நிலைய மத்திய தொழிற்படை போலீசாருக்கு தகவல் தரப்பட்டது. உடனடியாக மத்திய தொழிற்படை போலீசார் மோப்ப நாயுடன் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து மர்ம பையை சோதனை செய்தனர்.

பரபரப்பு

அதில் வெடிகுண்டு எதுவும்இல்லை என தெரியவந்தது. அதன்பின்னரேஅனைவரும் நிம்மதி அடைந்தனர். பின்னர் அந்த பையை பிரித்து பார்த்தபோது அதில் துணிகள் மற்றும் பிஸ்கட்டுகள் இருந்தன.

விமானத்தில் வந்த பயணி யாராவது வாகனத்தில் செல்லும்அவசரத்தில் அந்த பையை மறந்து விட்டு சென்று இருக்கலாம் என்று கூறப்படுகிறது. அந்த பையை விமான நிலைய மேலாளரிடம் ஒப்படைத்தனர்.இதனால் விமான நிலையத்தில் சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது.