பிரபல பாடகர் மிகா சிங்கின் மேலாளர் தற்கொலை


பிரபல பாடகர் மிகா சிங்கின் மேலாளர் தற்கொலை
x
தினத்தந்தி 23 Feb 2020 6:32 AM IST (Updated: 23 Feb 2020 6:32 AM IST)
t-max-icont-min-icon

பிரபல பாடகர் மிகா சிங்கின் மேலாளர் தற்கொலை செய்து கொண்டார்.

மும்பை, 

மும்பை அந்தேரி போர் பங்களா பகுதியில் பிரபல பாடகர் மிகா சிங்கிற்கு சொந்தமான பங்களா உள்ளது. இதில் பாடகரின் ஸ்டுடியோ செயல்பட்டு வந்தது. மேலும் அங்கு பாடகரின் மேலாளர் சவுமியா கான் (வயது30) என்பவர் வசித்து வந்தார்.

சம்பவத்தன்று வீட்டில் பேச்சு மூச்சின்றி கிடந்த சவுமியா கானை மீட்ட பங்களா ஊழியர்கள், அவரை அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அப்போது அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து தகவல் அறிந்து சென்ற போலீசார் அவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

பின்னர் அவரது உடல் சொந்த ஊரான பஞ்சாப்புக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்தநிலையில் சவுமியா கான் அதிகளவு தூக்க மாத்திரைகளை தின்று தற்கொலை செய்து கொண்டதாக போலீசார் தெரிவித்தனர்.

இதுகுறித்து வெர்சோவா போலீஸ் நிலைய சீனியர் இன்ஸ்பெக்டர் கூறுகையில், ‘‘இதுகுறித்து விபத்து வழக்குப்பதிவு செய்து உள்ளோம். அவரது சாவில் சந்தேகப்படும்படி எதுவுமில்லை’’ என்றார்.


Next Story