குடியுரிமை திருத்த சட்டம் ஆபத்தானது கி.வீரமணி பேச்சு
குடியுரிமை திருத்த சட்டம் ஆபத்தானது என நன்னிலத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் கி.வீரமணி பேசினார்.
நன்னிலம்,
நன்னிலம் வடக்குவீதியில் திராவிடர் கழகம் சார்பில் பெரியார் பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் மோகன் தலைமை தாங்கினார். மாநில விவசாய தொழிலாளர் அணி செயலாளர் கோபால், மண்டல தலைவர் ஜெகதீசன், மண்டல மகளிரணி செயலாளர் செந்தமிழ்செல்வி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி கலந்து கொண்டு பேசினார்.அப்போது அவர் கூறியதாவது:-
நீட் தேர்வில் தமிழக அரசு மெத்தனமாக உள்ளது. நீர் தேர்வு மூலம் கார்ப்பரேட் முதலாளிகளின் குழந்தைகள் தான் மருத்துவர் ஆக முடியும். தேர்வு பயிற்சி வேறு, கல்வி முயற்சி வேறு. மேலும் விதை நெல்லை எடுத்து விருந்தினருக்கு சமைத்து போடுவதுபோல மத்திய அரசு, ரிசர்வ் வங்கி பணத்தை எடுத்து செலவு செய்கிறது.
சிறை நிரப்பும் போராட்டம்
குடியுரிமை திருத்த சட்டம் ஆபத்தானது. சமஸ்கிருத மொழிக்கு அதிக நிதியும், தமிழ் மொழிக்கு குறைவான நிதியும் ஒதுக்கப்படுகிறது. இவைகளை கண்டித்து அடுத்த மார்ச் 23-ந் தேதி சிறை நிரப்பும் போராட்டத்தில் திரளாக கலந்து கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
இதில் தலைமை பேச்சாளர் அன்பழகன், பொதுச்செயலாளர் ஜெயகுமார், மாநில அமைப்பாளர் குணசேகரன், முன்னாள் எம்.எல்.ஏ. மணிமாறன் உள்பட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக நகர தலைவர் சஞ்சீவி வரவேற்றார். முடிவில் ஒன்றிய தலைவர் பொய்யாமொழி நன்றி கூறினார்.

Related Tags :
Next Story