குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து 11-வது நாளாக முஸ்லிம்கள் காத்திருப்பு போராட்டம்


குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து 11-வது நாளாக முஸ்லிம்கள் காத்திருப்பு போராட்டம்
x
தினத்தந்தி 26 Feb 2020 4:30 AM IST (Updated: 25 Feb 2020 11:07 PM IST)
t-max-icont-min-icon

கூத்தாநல்லூரில் குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து முஸ்லிம்கள் 11-வது நாளாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கூத்தாநல்லூர்,

மத்திய அரசால் கொண்டு வந்துள்ள குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து கூத்தாநல்லூரில் முஸ்லிம் அமைப்புகள் மற்றும் அரசியல் கட்சிகளை சேர்ந்தவர்கள் பல்வேறு ஆர்ப்பாட்டங்களை நடத்தி வருகின்றனர். அதன் ஒருபகுதியாக குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து கூத்தாநல்லூரில் கடந்த 15-ந் தேதி முதல் முஸ்லிம்கள் தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இரவு, பகலாக இந்தபோராட்டம் தொடர்ந்து நடந்து வருகிறது. நேற்று 11-வது நாளாக காத்திருப்பு போராட்டம் நீடித்தது. அப்போது மத்திய அரசு குடியுரிமை திருத்த சட்டத்தை உடனடியாக திரும்ப பெற வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோ‌‌ஷங்கள் எழுப்பினர். இதில் ஏராளமான இஸ்லாமிய பெண்கள், குழந்தைகள், ஆண்கள், அரசியல் கட்சிகளை சேர்ந்தவர்கள் மற்றும் பல்வேறு அமைப்பினர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story