மாவட்ட செய்திகள்

மாவட்ட அளவிலான ஆக்கி போட்டி 7-ந் தேதி நடக்கிறது + "||" + A district-level tournament is being held on the 7th

மாவட்ட அளவிலான ஆக்கி போட்டி 7-ந் தேதி நடக்கிறது

மாவட்ட அளவிலான ஆக்கி போட்டி 7-ந் தேதி நடக்கிறது
மாவட்ட அளவிலான ஆக்கி போட்டி வருகிற 7-ந் தேதி (சனிக்கிழமை) நடக்கிறது.
பெரம்பலூர்,

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், பெரம்பலூர் மாவட்ட அளவிலான ஆண்களுக்கான ஆக்கி லீக் சாம்பியன்‌ஷிப் விளையாட்டு போட்டிகள் டாக்டர் எம்.ஜிஆர். விளையாட்டு வளாகத்தில் வருகிற 7-ந் தேதி (சனிக்கிழமை) நடத்தப்பட உள்ளது. போட்டிகளில் கலந்து கொள்ள விரும்பும் பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் தனியார் வளைகோல் பந்து மன்றங்களில் உள்ள அணியினர் 7-ந் தேதி காலை 8.30 மணிக்குள் மாவட்ட விளையாட்டு அலுவலகத்தில் பதிவு செய்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.


6 மாவட்டங்களுக்கு...

ஆக்கி போட்டிகள் தொடர் போட்டி முறையில் நடத்தப்பட உள்ளது. மாவட்ட அளவில் வெற்றி பெறும் அணிகளுக்கு சான்றிதழ்களும், பரிசும் வழங்கப் படும். இதில் அதிக புள்ளிகள் எடுத்து வெற்றிபெறும் அணிகளுக்கு மண்டல அளவில் திருச்சியில் நடைபெறும் 6 மாவட்டங்களுக்கு இடையேயான (திருச்சி, தஞ்சாவூர், அரியலூர், புதுக்கோட்டை, பெரம்பலூர், திருவாரூர்) போட்டியில் கலந்து கொள்ளலாம்.

போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெறும் அணிகளுக்கு பரிசுகளும், சான்றிதழ்களும் வழங்கப்படும். எனவே அனைத்து பள்ளி மாணவர்கள் மற்றும் வளைகோல் பந்து மன்றங்களில் உள்ள வளைகோல் பந்து அணியினர் போட்டியில் கலந்து கொண்டு பயன்பெறலாம்.

இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. கரூரில், மகளிர் தினத்தையொட்டி விளையாட்டு போட்டி வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு
கரூரில், மகளிர் தினத்தை யொட்டி விளையாட்டு போட்டி நடைபெற்றது. இதையடுத்து வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.
2. சேலத்தில் மாணவ, மாணவிகளுக்கு விளையாட்டு போட்டி
சேலம் கல்வி மாவட்ட அளவில் மாணவ, மாணவிகளுக்கான விளையாட்டு போட்டி நடைபெற்றது.
3. தர்மபுரி மாவட்டத்தில் பள்ளி மாணவ-மாணவிகளுக்கான விளையாட்டு போட்டி முதன்மை கல்வி அலுவலர் பரிசு வழங்கினார்
தர்மபுரி மாவட்டத்தில் நடந்த பள்ளி மாணவ-மாணவிகளுக்கான விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கீதா பரிசு வழங்கினார்.
4. சேலத்தில் மண்டல விளையாட்டு போட்டி 270 மாணவர்கள் பங்கேற்பு
சேலத்தில் நடந்த மண்டல அளவிலான விளையாட்டு போட்டியில் 270 மாணவர்கள் பங்கேற்றனர்.
5. உலக திறனாய்வு கண்டறியும் திட்டத்தில் பள்ளி மாணவர்களுக்கான தடகள போட்டி
உலக திறனாய்வு கண்டறியும் திட்டத்தில் பள்ளி மாணவர்களுக்கான தடகள போட்டி.