மகளிர் தினத்தையொட்டி குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக பெண்கள் பேரணி நாகையில் நடந்தது


மகளிர் தினத்தையொட்டி குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக பெண்கள் பேரணி நாகையில் நடந்தது
x
தினத்தந்தி 8 March 2020 11:30 PM GMT (Updated: 8 March 2020 8:30 PM GMT)

நாகையில் மகளிர் தினத்தையொட்டி குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக பெண்கள் பேரணி நடத்தினர்.

நாகப்பட்டினம்,

நாகையில் உலக மகளிர் தினத்தையொட்டி நேற்று விமன் இந்தியா மூமென்ட் அமைப்பு சார்பில் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக பேரணி நடைபெற்றது. நாகை கடைத்தெரு அருகே தொடங்கிய பேரணி அண்ணாசிலை, அரசு தலைமை மருத்துவமனை சாலை, புதிய பஸ் நிலையம் வழியாக அவுரித்திடலை வந்தடைந்தது. பேரணியில் பெண்கள் மற்றும் பெண் குழந்தைகள் மீதான பாலியல் துன்புறுத்தல், கூட்டு பலாத்காரம் ஆகியவற்றை கண்டிப்பது, குடியுரிமை திருத்த சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு ஆகியவற்றை கண்டிப்பது என்பன உள்ளிட்ட பல்வேறு வாசகங்கள் எழுதப்பட்ட பதாகைகளை கையில் ஏந்தியவாறு பெண்கள் கலந்துகொண்டனர்.

மாநாடு

தொடர்ந்து அவுரித்திடலில் மாநாடு நடைபெற்றது. மாநாட்டுக்கு மாநில தலைவர் நஜ்மா பேகன் தலைமை தாங்கினார். எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில செயலாளர் அஹமது நவவி, பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பின் மாநில செயற்குழு உறுப்பினர் அமீர்பாட்‌ஷா ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் மாநில பொது செயலாளர் நஜ்மா பானு கலந்துகொண்டு பேசினார். மாநாட்டில் குடியுரிமை திருத்த சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு ஆகியவற்றை புறக்கணிக்க வேண்டும். இந்த 3 சட்டங்களையும் தமிழக அரசு நடைமுறைப்படுத்தக்கூடாது என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் திரளான பெண்கள் கலந்துகொண்டனர்.


Next Story