சத்தியமங்கலம் பகுதியில் ரூ.1½ கோடி மதிப்பீட்டில் தார்சாலை பணி எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்


சத்தியமங்கலம் பகுதியில் ரூ.1½ கோடி மதிப்பீட்டில் தார்சாலை பணி எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்
x
தினத்தந்தி 10 March 2020 2:45 AM IST (Updated: 10 March 2020 12:50 AM IST)
t-max-icont-min-icon

சத்தியமங்கலம் பகுதியில் ரூ.1½ கோடி மதிப்பீட்டில் தார்சாலை பணியை எஸ்.ஈஸ்வரன் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.

சத்தியமங்கலம், 

சத்தியமங்கலம் திப்பு சுல்தான் ரோடு, கட்டபொம்மன் நகர், ராஜீவ்நகர், அத்தாணி ரோடு சந்து, கொங்கு நகர் ஆகிய பகுதிகளில் தார்சாலை அமைக்க அரசு ரூ.1கோடியே 52 லட்சத்து 70 ஆயிரம் ஒதுக்கியிருந்தது. இதைத்தொடர்ந்து பணிகள் தொடக்க விழா நடைபெற்றது. விழாவில் பவானிசாகர் தொகுதி எஸ்.ஈஸ்வரன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு பணியை தொடங்கி வைத்தார்.

இதில் ஈரோடு மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் எஸ்.கே.பழனிச்சாமி, சத்தியமங்கலம் தெற்கு ஒன்றிய செயலாளர் வி.சி.வரதராஜ், சத்தியமங்கலம் நகராட்சி ஆணையாளர் (பொறுப்பு) பொறியாளர் ரவி, அரியப்பம்பாளையம் பேரூர் அ.தி.மு.க. ஜெயலலிதா பேரவை செயலாளர் மிலிட்டரி சரவணன், கொமராபாளையம் ஊராட்சி தலைவர் எஸ்.எம்.சரவணன், சதுமுகை ஊராட்சி தலைவர் சத்யா சிவராஜ், மாக்கினாங்கோம்பை ஊராட்சி தலைவர் அம்மு ஈஸ்வரன், ஈரோடு மாவட்ட ஜெயலலிதா பேரவை துணை செயலாளர் அம்மு பூபதி, ஆடிட்டர் இளங்கோ உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story