கிரு‌‌ஷ்ணகிரியில் பெண் காவலர்களுக்கான புற்றுநோய் பரிசோதனை முகாம் கலெக்டர் தொடங்கி வைத்தார்


கிரு‌‌ஷ்ணகிரியில் பெண் காவலர்களுக்கான புற்றுநோய் பரிசோதனை முகாம் கலெக்டர் தொடங்கி வைத்தார்
x
தினத்தந்தி 11 March 2020 11:00 PM GMT (Updated: 11 March 2020 7:34 PM GMT)

கிரு‌‌ஷ்ணகிரியில் பெண் காவலர்களுக்கான புற்று நோய் பரிசோதனை முகாமை கலெக்டர் பிரபாகர் தொடங்கி வைத்தார்.

கிரு‌‌ஷ்ணகிரி,

கிரு‌‌ஷ்ணகிரியில், உலக மகளிர் தினத்தையொட்டி, கிரு‌‌ஷ்ணகிரி மற்றும் தர்மபுரி மாவட்ட மகப்பேறு மருத்துவ சங்கம் மற்றும் இந்திய மருத்துவ சங்கம் சார்பில் பெண் காவலர்களுக்கான சிறப்பு புற்று நோய் கண்டறியும் மருத்துவ முகாம் நடந்தது. இந்த முகாமை மாவட்ட கலெக்டர் பிரபாகர், போலீஸ் சூப்பிரண்டு பண்டி கங்காதர் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

முகாமில் மாவட்டத்தில் உள்ள 300-க்கும் மேற்பட்ட பெண் காவலர்களுக்கு கர்ப்பப்பை மற்றும் மார்பக புற்றுநோய் கண்டறியும் பரிசோதனை செய்யப்பட்டது.

ஆலோசனைகள்

மேலும், பெண் காவலர்களுக்கு ரத்த அழுத்த பரிசோதனை செய்யப்பட்டு, மருத்துவர்கள் ஆலோசனைகள் வழங்கினார்கள். இதில், கிரு‌‌ஷ்ணகிரி மற்றும் தர்மபுரி மாவட்ட மகப்பேறு மருத்துவ சங்கத்தின் தலைவர் சித்ரா, செயலாளர் ரேகா ராஜே‌‌ஷ், இந்திய மருத்துவ சங்க தலைவர் ஜோ அண்ணாஜி, செயலாளர் தனசேகரன், டாக்டர் சுஜாதா அன்பழகன், கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு சக்திவேல் மற்றும் டாக்டர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


Next Story