ஊராட்சி தலைவர்களுக்கு அடையாள அட்டை - அதிகாரி தகவல்


ஊராட்சி தலைவர்களுக்கு அடையாள அட்டை - அதிகாரி தகவல்
x
தினத்தந்தி 17 March 2020 3:15 AM IST (Updated: 17 March 2020 1:55 AM IST)
t-max-icont-min-icon

ஊராட்சி தலைவர்கள் அனைவருக்கும் அடையாள அட்டை வழங்கப்படும் என்று ஊராட்சிகளின் உதவி இயக்குனர் கேசவதாசன் கூறினார்.

பனைக்குளம்,

மண்டபம் ஒன்றிய ஊராட்சி தலைவர்கள் கூட்டம் உச்சிப்புளியில் உள்ள ஒன்றிய அலுவலக வளாகத்தில் நடைபெற்றது. கூட்டத்துக்கு கூட்டமைப்பு தலைவர் கார்மேகம் தலைமை தாங்கினார். இதில் ஒன்றிய ஆணையாளர் சேவுகப்பெருமாள், வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜேந்திரன், ஒன்றிய தலைவர் சுப்புலட்சுமி ஜீவானந்தம், துணை தலைவர் பகவதிலட்சுமி முத்துக்குமார், மாவட்ட கூட்டமைப்பு தலைவர் சித்ராமருது ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மண்டபம் ஒன்றிய கவுன்சிலர் மருதுபாண்டியன் ஆலோசனைகளை வழங்கி பேசினார். இதில் சிறப்பு விருந்தினராக மாவட்ட ஊராட்சிகள் உதவி இயக்குனர் கேசவதாசன் கலந்து கொண்டு பேசியதாவது:- கிராம சபை கூட்டம் குறித்து ஊராட்சி தலைவர்கள் தங்கள் பகுதியில் உள்ள பொதுமக்களுக்கு முதலில் தண்டோரா மூலம் அறிவிப்பு செய்து அந்த கூட்டத்தில் கிராம மக்களை கலந்து கொள்ள செய்து அவர்களது கோரிக்கைகளை தீர்மானமாக நிறைவேற்ற வேண்டும். இதன்மூலம் பொதுமக்கள் தேவையான அரசு நலத்திட்டங்களை கேட்டுப்பெறலாம். ஊராட்சி தலைவர்கள் கணக்குகளை முறையாக பராமரிக்க வேண்டும்.

ஊராட்சி தலைவர்கள் அனைவருக்கும் அடையாள அட்டை வழங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. அரசு அறிவிக்கக்கூடிய மக்கள் நலத் திட்டங்களை ஊராட்சி தலைவர்கள் சிறப்பாக செய்து முடிக்கவேண்டும். ராமநாதபுரம் மாவட்டம் ஒரு சிறந்த ஊராட்சி மாவட்டமாக திகழ அனைவரும் ஒத்துழைக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

இதில் ராமநாதபுரம் மாவட்ட ஊராட்சி தலைவர்கள் கூட்டமைப்பு செயலாளர் செந்தில்குமார், பொருளாளர் முகமது இக்பால், ஒன்றிய ஒருங்கிணைப்பாளர் கோகிலா ராஜேந்திரன், துணை தலைவர்கள் மணிமேகலை முத்துராமலிங்கம், ராஜாமணி செல்வமேரி, கவிதா மோகன், கீழ்புளி கருப்பையா, காயத்ரி கார்த்திகேயன், துணை செயலாளர்கள் செந்தில், ராணி கணேசன், முகமது உமர் பாரூக், ரெத்தினம் துரையரசன், ஆனந்தம்மாள் அற்புதராஜ் மற்றும் மண்டபம் ஒன்றிய கூட்டமைப்பு துணை தலைவர் பெருங்குளம் சிவக்குமார், துணை செயலாளர் கணேசன், பொருளாளர் சந்திரசேகர் ஆகியோர் பேசினர். கூட்டத்தில் ஊராட்சிக்கு ஒரு வயர்மேன் என்ற அடிப்படையில் நியமனம் செய்ய வேண்டும். கிராம சபை கூட்டம் குறித்த அறிவிப்பை சம்பந்தப்பட்ட அலுவலர்கள் 3 நாட்களுக்கு முன்னதாகவே தெரிவிக்க வேண்டும். மாதம் ஒருமுறை கலெக்டர் தலைமையில் ஊராட்சி தலைவர்களின் கூட்டம் நடத்தப்பட வேண்டும். ஊராட்சி தலைவர்களுக்கு முழுமையான அதிகாரத்தை வழங்க வேண்டும். ஊராட்சியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றிட உரிய அதிகாரம் வழங்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில் மண்டபம் ஒன்றியத்துக்கு உட்பட்ட ஊராட்சி தலைவர்கள் வள்ளி, முகமது அலி ஜின்ன, முத்தமிழ்செல்வி, கணேசன், சிவக்குமார், கார்மேகம், சக்திவேல், ராணி, குப்பைகனி, துளசிதேவி, கோகிலாவாணி, நாகேசுவரி, கண்ணம்மாள், களஞ்சியலட்சுமி, மோகன்குமார், பவுசியாபானு, கலா, மீரான்ஒலி, பைரோஸ் ஆசியம்மாள், பரமேசுவரி, செய்யது அல்லாபிச்சை, சீனி அரசு, அகிலா பேட்ரிக், குயின்மேரி மற்றும் ஊராட்சி செயலாளர்கள், பட்டணம்காத்தான் நாகேந்திரன் உள்பட அனைத்து ஊராட்சி செயலர்களும் கலந்துகொண்டனர். முடிவில் கூட்டமைப்பு செயலாளர் புதுமடம் காமில் உசேன் நன்றி கூறினார். முன்னதாக அனைத்து ஊராட்சி தலைவர்களிடமும் படை வீரர் கொடிநாள் ரசீதுகளை வழங்கி நிதி திரட்டும்படி ஊராட்சிகள் உதவி இயக்குனர் கேசவதாசன் கேட்டுக்கொண்டார்.

Next Story