மோட்டார் சைக்கிள் திருடர்கள் 2 பேர் குண்டர் சட்டத்தில் கைது


மோட்டார் சைக்கிள் திருடர்கள் 2 பேர் குண்டர் சட்டத்தில் கைது
x
தினத்தந்தி 20 March 2020 3:30 AM IST (Updated: 19 March 2020 5:27 PM IST)
t-max-icont-min-icon

மோட்டார் சைக்கிள் திருடர்கள் 2 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தூசி, 

செய்யாறு அருகே தூசி போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் தொடர்ந்து மோட்டார் சைக்கிள் திருட்டில் ஈடுபட்டு வந்த செய்யாறு திருவத்தூர் பகுதியை சேர்ந்த ரஞ்சித் (வயது 24), வெங்கட்ராயன் பேட்டையை சேர்ந்த மொய்தீன்கான் (30) ஆகியோரை தூசி போலீசார் கைது செய்தனர்.

இவர்கள் இருவரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிபிசக்ரவர்த்தி கலெக்டர் கந்தசாமிக்கு பரிந்துரை செய்தார். இதையடுத்து அவரது உத்தரவின் பேரில் ரஞ்சித் மற்றும் மொய்தீன்கான் ஆகியோர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர். தொடர்ந்து அவர்கள் வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

Next Story