மாவட்ட செய்திகள்

முதல்-அமைச்சர் குறித்து அவதூறு: வாலிபர் கைது + "||" + Slander on First-Minister Youth arrested

முதல்-அமைச்சர் குறித்து அவதூறு: வாலிபர் கைது

முதல்-அமைச்சர் குறித்து அவதூறு: வாலிபர் கைது
முதல்-அமைச்சர் குறித்து அவதூறு பேசியதாக வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
சுரண்டை, 

பாவூர்சத்திரம் அருகே உள்ள நடுபூலாங்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் ராமையா மகன் அஜித் (வயது 25). இவர் சுரண்டையில் உள்ள ஒரு செல்போன் கடையில் வேலை பார்த்து வருகிறார். அஜித் கடந்த மாதம் பேஸ்புக் பக்கத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை அவதூறாக விமர்சனம் செய்து பதிவு வெளியிட்டதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து சென்னையைச் சேர்ந்த அ.தி.மு.க. பிரமுகர் தனசேகர் சென்னை பூந்தமல்லி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். இதுதொடர்பாக சென்னை சைபர் கிரைம் தனிப்படை போலீசார் விசாரணை நடத்துவதற்காக சுரண்டை வந்தனர். போலீசார் அஜித்தை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சென்னை புழல் சிறையில் அடைத்தனர்.