மயிலாடுதுறை மாவட்டமாக அறிவிப்பு: அ.தி.மு.க.வினர் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்


மயிலாடுதுறை மாவட்டமாக அறிவிப்பு: அ.தி.மு.க.வினர் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்
x
தினத்தந்தி 25 March 2020 4:30 AM IST (Updated: 25 March 2020 1:21 AM IST)
t-max-icont-min-icon

மயிலாடுதுறை மாவட்டமாக அறிவிக்கப்பட்டதையொட்டி கொள்ளிடம் மற்றும் மயிலாடுதுறையில் அ.தி.மு.க.வினர் பட்டாசு வெடித்து கொண்டாடினர்.

கொள்ளிடம்,

நாகை மாவட்டத்தில் இருந்து பிரித்து மயிலாடுதுறையை தனி மாவட்டமாக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். இதற்காக முதல்-அமைச்சருக்கும், மாவட்டம் அமைக்க பரிந்துரை செய்த துணை முதல்-அமைச்சர் பன்னீர்செல்வத்திற்கும், உறுதுணையாக இருந்த அமைச்சர் ஓ.எஸ்.மணியன், பாரதி எம்.எல்.ஏ. ஆகியோருக்கும் நன்றி தெரிவிக்கும் வகையில் கொள்ளிடம் கடைவீதியில் அ.தி.மு.க. ஒன்றிய செயலாளர் நற்குணன் தலைமையில் கட்சியினர் பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினர்.முன்னதாக கட்சியினர் பேரணியாக சென்று கொள்ளிடம் ஆற்றின் கரையோரம் உள்ள எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதில் மாவட்ட ஊராட்சி உறுப்பினர் சுமதி ராஜேந்திரன், மாவட்ட மீனவர் அணி செயலாளர் நாகரத்தினம், ஜெயலலிதா பேரவை துணை செயலாளர் சொக்கலிங்கம், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ஆனந்தநடராஜன், கட்சி நிர்வாகிகள் பாஸ்கரன், குன்னம் கருணாநிதி, விக்னே‌‌ஷ், நகர செயலாளர் சம்பந்தம் மற்றும் ஒன்றியக்குழு உறுப்பினர்கள், ஊராட்சி மன்ற தலைவர்கள் கலந்து கொண்டனர்.

மயிலாடுதுறை

இதேபோல மயிலாடுதுறை சித்தர்காட்டில் தெற்கு ஒன்றிய அ.தி.மு.க. சார்பில் பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு கட்சியின் தெற்கு ஒன்றிய செயலாளரும், முன்னாள் ஒன்றியக்குழு தலைவருமான சந்தோ‌‌ஷ்குமார் தலைமை தாங்கினார். முன்னதாக அண்ணாசிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

இதில் முன்னாள் நகர செயலாளர் ஸ்டாண்டு கிரு‌‌ஷ்ணமூர்த்தி, ஒன்றிய பொருளாளர் நெடுஞ்செழியன், கட்சி நிர்வாகிகள் செந்தா, மூவலூர் சேகர், சதீ‌‌ஷ்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story