மாவட்ட செய்திகள்

கிருஷ்ணகிரியில் மருந்து கடைகளில் முக கவசம், கிருமி நாசினி பதுக்கலா? குடிமைப்பொருட்கள் போலீசார் சோதனை + "||" + Facial armor, antiseptic lurking in drug stores in Krishnagiri? Civic goods police raid

கிருஷ்ணகிரியில் மருந்து கடைகளில் முக கவசம், கிருமி நாசினி பதுக்கலா? குடிமைப்பொருட்கள் போலீசார் சோதனை

கிருஷ்ணகிரியில் மருந்து கடைகளில் முக கவசம், கிருமி நாசினி பதுக்கலா? குடிமைப்பொருட்கள் போலீசார் சோதனை
கிருஷ்ணகிரி உள்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள மருந்து கடைகளில் முக கவசம், கிருமி நாசினி உள்ளிட்ட பொருட்கள் பதுக்கப்படுகிறதா? என்பது குறித்து நேற்று குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு பிரிவு போலீசார் சோதனை மேற் கொண்டனர்.
கிருஷ்ணகிரி,

கொரோனா வைரஸ் நோய் தடுப்பு முன்னெச்சரிக்கை காரணமாக, மத்திய-மாநில அரசுகள் மற்றும் சென்னை குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத்துறை டி.ஜி.பி. பிரதீப் வி.பிலிப், சென்னை மண்டல போலீஸ் சூப்பிரண்டு சாந்தி ஆகியோரின் உத்தரவின் பேரில், கோவை உட்கோட்ட போலீஸ் துணை போலீஸ் சூப்பிரண்டு ரவிக்குமார் மேற்பார்வையில் அந்தந்த பகுதியில் உள்ள மருந்து கடைகளில் முக கவசம், சோப்பு, கிருமி நாசினி பதுக்கி வைக்கப்பட்டுள்ளதா? கூடுதல் விலைக்கு விற்பனை செய்யப்படுகிறதா? என்பது குறித்து போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.


அதன்படி, கிருஷ்ணகிரி மாவட்டத்தில், கிருஷ்ணகிரி, காவேரிப்பட்டணம் உட்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள மருந்து கடைகளில் நேற்று இன்ஸ்பெக்டர் தில்லைநடராஜன், சப்-இன்ஸ்பெக்டர் சிவசாமி, போலீசார் சம்பத், மகாராஜன் ஆகியோர் கொண்ட குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர். இது குறித்து அதிகாரிகள் கூறியதாவது:-

நடவடிக்கை

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள மருந்தகங்கள், மருந்து வினியோகஸ்தர்கள் மற்றும் மருந்து நிறுவனங்களில் திடீர் சோதனை மேற்கொண்டு வருகிறோம். முக கவசம் மூன்றடுக்கு ரூ.10-க்கும், இரண்டடுக்கு ரூ.8-க்கும் விற்பனை செய்ய வேண்டும். மேலும் கைகளுக்கு பயன்படுத்தப்படும் கிருமி நாசினி 200 மில்லி லிட்டர் ரூ.100-க்கு விற்பனை செய்ய வேண்டும். அரசின் உத்தரவை மீறி பதுக்கினாலோ அல்லது அதிக விலைக்கு விற்றாலோ கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

மேலும், அவ்வாறு விற்பனை செய்வது கண்டறியப்பட்டால் சம்பந்தப்பட்டவர்கள் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர். இந்த ஆய்வில் பல மருந்து கடைகளில் கிருமி நாசினி, முக கவசங்கள் இருப்பு இல்லை என தெரிவிக்கப்பட்டது.


தொடர்புடைய செய்திகள்

1. வெளிநாடு- மற்ற மாநிலங்களில் இருந்து கரூர் மாவட்டத்திற்கு வருபவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு தீவிர கண்காணிப்பு
வெளிநாடு மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து கரூர் மாவட்டத்திற்கு வருபவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு, தீவிர கண்காணிப்பில் வைக்கப்படுவார்கள் என்று கலெக்டர் அன்பழகன் கூறினார்.
2. அரசு உத்தரவை மீறி திறந்து இருந்த வணிக நிறுவனங்கள் மூடல் அதிகாரிகள் நடவடிக்கை
மயிலாடுதுறையில் அரசு உத்தரவை மீறி திறந்து இருந்த வணிக நிறுவனங்கள் மூடப்பட்டன.
3. கொரோனா தடுப்பு நடவடிக்கைகள்: பொது இடத்தில் கூட்டமாக நிற்பதை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும் கலெக்டர் அறிவுரை
சின்னாளப்பட்டி, அம்மையநாயக்கனூர் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளை பார்வையிட்ட கலெக்டர் விஜயலட்சுமி, பொது இடத்தில் கூட்டமாக நிற்பதை தவிர்க்க வேண்டும் என்று பொதுமக்களுக்கு அறிவுரை வழங்கினார்.
4. தேனி பழைய அரசு மருத்துவமனை கட்டிடத்தில் 120 படுக்கை வசதியுடன் கொரோனா சிறப்பு சிகிச்சை பிரிவு கலெக்டர் ஆய்வு
தேனி பழைய அரசு மருத்துவமனை கட்டிடத்தில் 120 படுக்கை வசதிகளுடன் கூடிய கொரோனா வைரஸ் சிறப்பு சிகிச்சை பிரிவை கலெக்டர் பல்லவி பல்தேவ் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
5. நாமக்கல் அரசு ஆஸ்பத்திரியில் கொரோனா வைரஸ் தனிமைப்படுத்தும் பிரிவில் கலெக்டர் ஆய்வு
நாமக்கல் அரசு ஆஸ்பத்திரியில் கொரோனா வைரஸ் பரிசோதனை மேற்கொள்ளப்படும் நபர்களை தனிமைப்படுத்தி வைக்க ஏற்படுத்தப்பட்டு உள்ள பிரிவை கலெக்டர் மெகராஜ் ஆய்வு செய்தார்.