கொரோனாவுக்கு மதுரையை சேர்ந்தவர் பலி - தமிழகத்தில் முதல் உயிரிழப்பு


கொரோனாவுக்கு மதுரையை சேர்ந்தவர் பலி - தமிழகத்தில் முதல் உயிரிழப்பு
x
தினத்தந்தி 25 March 2020 12:45 AM GMT (Updated: 24 March 2020 10:12 PM GMT)

தமிழகத்தில் முதல் உயிரிழப்பாக கொரோனாவுக்கு மதுரையை சேர்ந்தவர் நேற்று இரவில் பரிதாபமாக இறந்தார்.

மதுரை, 

உலகை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் தமிழகத்திலும் வேகமாக பரவி வருகிறது. கொரோனா தொற்றுடன் தமிழகத்தில் பல்வேறு ஆஸ்பத்திரிகளில் 15-க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். அதில் மதுரையை சேர்ந்த 54 வயதுடைய ஒருவர் கடந்த சில நாட்களாக மதுரை அரசு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை பெற்று வந்தார்.

இந்தநிலையில் அவரது உடல்நிலை மோசமடைந்தது. இதுதொடர்பாக தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் நேற்று இரவில் வெளியிட்ட டுவிட்டர் பதிவில், அவரது உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக தெரிவித்து இருந்தார்.

இந்தநிலையில் நேற்று நள்ளிரவில் கொரோனாவுக்கு தமிழகத்தில் முதல் பலியாக சிகிச்சை பலனின்றி மதுரையை சேர்ந்தவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்த சம்பவம் தமிழகத்தில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Next Story