மாவட்ட செய்திகள்

இளம்பெண்ணுக்கு செல்போனில் தொல்லை: தட்டிக்கேட்ட பூசாரிக்கு கத்திக்குத்து; 2 பேர் கைது + "||" + Cell phone harassment for young woman Screaming at the tattered priest; 2 arrested

இளம்பெண்ணுக்கு செல்போனில் தொல்லை: தட்டிக்கேட்ட பூசாரிக்கு கத்திக்குத்து; 2 பேர் கைது

இளம்பெண்ணுக்கு செல்போனில் தொல்லை: தட்டிக்கேட்ட பூசாரிக்கு கத்திக்குத்து; 2 பேர் கைது
இளம்பெண்ணுக்கு செல்போனில் தொல்லை கொடுத்ததை தட்டிக்கேட்ட பூசாரியை கத்தியால் குத்திய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
கும்மிடிப்பூண்டி, 

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியை அடுத்த சுண்ணாம்புகுளம் கிராமத்தில் உள்ள சின்ன கொக்குபாளையம் தெருவைச் சேர்ந்தவர் குமரன்(வயது 28). கோவில் பூசாரி. இவருக்கு தெரிந்த இளம்பெண் ஒருவருக்கு எளாவூர் அடுத்த துராப்பள்ளம் கிராமத்தைச் சேர்ந்த தங்கராஜ் என்ற வாலிபர் செல்போனில் பேசி தொல்லை கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது. இதனை குமரன் தட்டிக்கேட்டுள்ளார்.

இந்த நிலையில் இந்த பிரச்சினை தொடர்பாக கடந்த 23-ந்தேதி இரவு துராப்பள்ளம் சுடுகாடு அருகே வாலிபர் தங்கராஜிடம் பேச்சு வார்த்தை நடத்த பூசாரி குமரன் காரில் சென்றார். அப்போது ஏற்பட்ட வாக்குவாதத்தில் குமரனை தங்கராசும், அவரது நண்பர்கள் 3 பேரும் சேர்ந்து கத்தியால் குத்தி, அவரது காரையும் சேதப்படுத்தியதாக கூறப்படுகிறது.

இதில் தலை, கால் மற்றும் கைகளில் பலத்த காயம் அடைந்த குமரன், சென்னையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளார். இது குறித்து இன்ஸ்பெக்டர் வெங்கடாசலம் தலைமையில் ஆரம்பாக்கம் சப்-இன்ஸ்பெக்டர் சந்திரசேகர் வழக்குபதிவு செய்து குமரனை தாக்கிய வழக்கில் தலையாரிப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த அஜித்(24), புது கும்மிடிப்பூண்டியைச் சேர்ந்த வினோத் குமார்(24) ஆகிய 2 வாலிபர்களை நேற்று கைது செய்தனர். இந்த வழக்கு தொடர்பாக மேலும் 2 பேரை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

1. சேலம் அரசு ஆஸ்பத்திரியில் அடிப்படை வசதிகள் செய்யக்கோரி வடமாநில இளம்பெண் திடீர் தர்ணா
சேலம் அரசு ஆஸ்பத்திரியில் அடிப்படை வசதிகள் செய்யக்கோரி வடமாநில இளம்பெண் திடீர் தர்ணா.
2. ஊரடங்கு உத்தரவால் சிக்க மாட்டோம் என நினைத்து இளம்பெண்ணிடம் சங்கிலி பறித்த வாலிபர்கள் - பொதுமக்கள் மடக்கிப்பிடித்து அடி-உதை
ஊரடங்கு உத்தரவால் சிக்க மாட்டோம் என நினைத்து இளம்பெண்ணிடம் சங்கிலி பறித்த வாலிபர்களை பொதுமக்கள் மடக்கிப்பிடித்து சரமாரியாக அடித்து உதைத்தனர்.
3. நாகர்கோவிலில் பஸ் சக்கரத்தில் சிக்கி இளம்பெண் சாவு: படுகாயம் அடைந்த கணவரும் பலியான பரிதாபம்
நாகர்கோவிலில் அரசு பஸ் சக்கரத்தில் சிக்கி இளம்பெண் பலியான சம்பவத்தில் படுகாயம் அடைந்த கணவரும் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.
4. சிலிண்டர் வெடித்து இளம்பெண் பலி காப்பாற்ற முயன்ற கணவர் படுகாயம்
ஈரோடு அருகே சிலிண்டர் வெடித்து இளம்பெண் இறந்தார். அவரை காப்பாற்ற சென்ற கணவர் படுகாயம் அடைந்தார்.
5. ஆர்.கே.பேட்டை அருகே, இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை
ஆர்.கே.பேட்டை அருகே இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.