அரியலூரில், காய்கறி கடைகளை பஸ் நிலையத்துக்கு மாற்ற வியாபாரிகள் கோரிக்கை


அரியலூரில், காய்கறி கடைகளை பஸ் நிலையத்துக்கு மாற்ற வியாபாரிகள் கோரிக்கை
x
தினத்தந்தி 29 March 2020 9:37 AM IST (Updated: 29 March 2020 9:37 AM IST)
t-max-icont-min-icon

அரியலூரில் காய்கறி கடைகளை பஸ் நிலையத்துக்கு மாற்ற வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அரியலூர்,

அரியலூர் மாவட்டத்தில், கொரோனா வைரஸ் தடுப்புக் காக பல்வேறு நடவடிக்கை களை மாவட்ட நிர்வாகம் எடுத்துள்ளது. மாவட்டத்தில் பொதுமக்களுக்கு தேவைப் படும் அத்தியாவசிய பொருட் கள் தடையின்றி கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பொதுமக்கள் கூட்டமாக பொருட்கள் வாங்குவதை தவிர்த்திடும் வகையில் அரி யலூர் நகராட்சிக்கு உட்பட்ட காந்தி மார்கெட் தினசரி காய்கறி கடைகள் இடமாற்றப் பட்டு, நேற்று முதல் தற்காலிக மாக அரியலூர் அரசு மேல் நிலைப்பள்ளி மைதானத் திலும், ஜெயங்கொண்டம் நக ராட்சிக்கு உட்பட்ட காய்கறி மார்க்கெட்டின் ஒரு பகுதி கடைகள் ஜெயங்கொண்டம் மீன் மார்க்கெட்டின் பின் புறமும், மற்றொரு பகுதி கடைகள் பஸ் நிலையத்திலும் நேற்று முதல் தற்காலிகமாக செயல்பட தொடங்கி உள் ளது.

மேலும் அங்கு திறந்தவெளி யில் ஒவ்வொரு கடைக்கும் 2 மீட்டர் இடைவெளி விட்டு வட்டம் போடப்பட்டு, அதில் பொதுமக்கள் நின்று காய்கறி கள், பழங்கள் வாங்கிச்செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அரியலூர் அரசு பள்ளி மைதா னத்தில் வெயில் அடிப்பதால் காய்கறி கடைகளில் வியா பாரம் செய்வதில் சிரமம் ஏற் பட்டது. இங்கு போதிய கழிப் பிட வசதியும், குடிப்பதற்கு தண்ணீர் வசதியும் இல்லை, எனவே காய்கறி கடைகளை அனைத்து வசதிகளும் உள்ள அரியலூர் பஸ் நிலையத்துக்கு மாற்ற வேண்டும் என்று மாவட்ட நிர்வாகத்திற்கு வியா பாரிகள் கோரிக்கை விடுத்துள் ளனர். இதற்கிடையே காய்கறி களை அதிக விலைக்கு விற்கும் வியாபாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

144 தடை உத்தரவு காரண மாக செந்துறை தாலுகாவிற்கு உட்பட்ட பகுதிகளில் அரியலூர் சரக போலீஸ் துணை சூப்பிரண்டு திருமேனி தலைமையில் அதிரடிப்படை போலீசாரும், தாசில்தார் முத்துகிருஷ்ணன், வட்டார வளர்ச்சி அலுவலர் சிவாஜி ஆகியோரும் தீவிர கண் காணிப்பில் ஈடுபட்டு வரு கின்றனர். செந்துறை பஸ் நிறுத்தத்தில் உணவின்றி தவித்த ஆதரவற்ற மூதாட்டிக்கு தாசில்தார் முத்துகிருஷ்ணன் உணவு மற்றும் தண்ணீர் வழங்கினார். மேலும் அவரை, உறவினர்களிடம் ஒப்படைக் கும் பணியில் ஈடுபட்டு வருகிறார்.

ஊரடங்கு உத்தரவால் சர்க்கஸ் நடத்த முடியாமல் உணவின்றி தவித்த ஜெயங் கொண்டம் தனியார் சர்க்கஸ் நிறுவன ஊழியர்களுக்கு செங்குந்தபுரம் கிராமத்தை சேர்ந்த திருவள்ளுவர் ஞானம் மன்றம் மற்றும் லயன்ஸ் சங்கம் சார்பில் உணவு பொருட்களை வழங்கினர். அப்போது நகராட்சி ஆணையர் அறச் செல்வி உள்ளிட்டோர் உடனி ருந்தனர். அரியலூர் மாவட் டத்தில் உள்ள அனைத்து பெட்ரோல் விற்பனை நிலைய ங்களில் சமூக இடை வெளியை வாகன ஓட்டிகள் கடைபிடிப் பதற்காக கட்டம் போடப்பட்டுள்ளது. தா.பழூர் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் பணியாற்றி வரும் தூய்மை பணியாளர் களுக்கு, வார்டு உறுப் பினர் ஒருவர் தனது வீட்டில் இருந்து டீ கொண்டு வந்து கொடுத்தார்.

Next Story