கலெக்டர் அலுவலக வளாகத்தில் கிருமி நாசினி தெளிக்கும் பணி


கலெக்டர் அலுவலக வளாகத்தில் கிருமி நாசினி தெளிக்கும் பணி
x
தினத்தந்தி 18 April 2020 4:30 AM IST (Updated: 18 April 2020 4:18 AM IST)
t-max-icont-min-icon

கலெக்டர் அலுவலக வளாகத்தில் கிருமி நாசினி தெளிக்கும் பணி நடைபெற்றது.

பனைக்குளம், 

கொரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கலெக்டர் வீரராகவ ராவ் தீவிரமாக மேற்கொண்டு வருகிறார். அவரது உத்தரவின் பேரில் ஊராட்சி, நகராட்சி, பேரூராட்சி ஆகிய பகுதிகளில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு வருகிறது. 

இந்த நிலையில் பட்டணம்காத்தான் ஊராட்சியில் உள்ள முக்கிய பகுதியான கலெக்டர் அலுவலக வளாகம் முழுவதும் உள்ள கட்டிடங்கள், வாகன நிறுத்துமிடங்கள் மற்றும் பொதுமக்கள் கூடும் இடங்களில் கிருமி நாசினி தெளிக்கும் பணி நடைபெற்றது. 

இதனை ஊராட்சிகள் உதவி இயக்குனர் கேசவதாசன் தொடங்கி வைத்தார். தொடர்ந்து மண்டபம் யூனியன் ஆணையாளர் சேவுகப்பெருமாள், வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜேந்திரன் ஆகியோர் முன்னிலையில் பட்டணம்காத்தான் ஊராட்சி தலைவர் சித்ரா மருது, ஒன்றிய கவுன்சிலர் மருதுபாண்டியன் ஆகியோர் மேற்பார்வையில் கலெக்டர் அலுவலக வளாக பகுதி முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது. அப்போது ஊராட்சி துணை தலைவர் வினோத், ஊராட்சி செயலர் நாகேந்திரன் மற்றும் ஊராட்சி உறுப்பினர்கள் உடனிருந்தனர்.

Next Story