பென்னாகரத்தில் விதிமுறையை மீறி திறக்கப்பட்ட 3 கடைகளுக்கு ‘சீல்’


பென்னாகரத்தில் விதிமுறையை மீறி திறக்கப்பட்ட 3 கடைகளுக்கு ‘சீல்’
x
தினத்தந்தி 9 May 2020 9:35 AM IST (Updated: 9 May 2020 9:35 AM IST)
t-max-icont-min-icon

பென்னாகரத்தில் விதிமுறையை மீறி திறக்கப்பட்ட 3 கடைகளுக்கு ‘சீல்’.

பென்னாகரம்,

தர்மபுரி மாவட்டம் பென்னாகரத்தில் கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு அமலில் உள்ளது. இந்த நிலையில் அதிகாரிகள் கண்காணிப்பு பணி மேற்கொண்டனர். அப்போது பென்னாகரத்தில் ஒரு வணிக வளாகத்தில் விதிமுறையை மீறி 2 ஜவுளி கடைகள் மற்றும் ஒரு கவரிங் நகை கடை திறக்கப்பட்டு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து தாசில்தார் சேதுலிங்கம் மேற்பார்வையில் துணை தாசில்தார் சிவக்குமார், வருவாய் ஆய்வாளர் சிவன், கிராம நிர்வாக அலுவலர் ரத்தினவேல் ஆகியோர் அந்த 3 கடைகளுக்கும் ‘சீல்’ வைத்தனர்.

Next Story