மாவட்ட செய்திகள்

தூய்மை பணியாளர்களுக்கு மருத்துவ காப்பீடு + "||" + Medical insurance for purity workers

தூய்மை பணியாளர்களுக்கு மருத்துவ காப்பீடு

தூய்மை பணியாளர்களுக்கு மருத்துவ காப்பீடு
பொன்முடி ஊராட்சியில் தூய்மை பணியாளர்களுக்கு மருத்துவ காப்பீடு வழங்கப்பட்டது.
பெருந்துறை, 

பெருந்துறை ஒன்றியம், பொன்முடி ஊராட்சி தலைவராக இருப்பவர் தங்கவேல். இவர் தனது ஊராட்சியில் உள்ள பணியாளர்கள் 3 பேருக்கு, கொரோனா தொற்று பாதிப்பு மற்றும் இதர நோய்களால் பாதிப்பு அடைந்தால் அவர்களுக்கு தலா ரூ.2 லட்சம் மருத்துவ இழப்பீடு கிடைக்கும் வகையில் தனது சொந்த செலவில் ரூ.12 ஆயிரம் பிரிமியம் செலுத்தி 3 ஸ்டார் ஹெல்த் மருத்துவ காப்பீடுகளை பெற்றுத்தந்துள்ளார்.

இந்த காப்பீடு பத்திரங்கள் வழங்குதல் மற்றும் பொன்முடி ஊராட்சி பகுதிகளில் ஏழைகளுக்கு நிவாரண உதவி பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று காலை நடந்தது. சண்முகபுரத்தில் நடந்த இந்த நிகழ்ச்சிக்கு பெருந்துறை ஒன்றிய குழு கவுன்சிலர் ஜெயக்குமார் தலைமை தாங்கினார். ஊராட்சி மன்ற தலைவர் தங்கவேல் மருத்துவ காப்பீட்டு பத்திரங்கள் மற்றும் நிவாரண பொருட்களை பொதுமக்களுக்கு வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் பொன்முடி, கம்புளியம்பட்டி ஊராட்சிகளை சேர்ந்த பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்திகள்

1. தூய்மை பணியாளர்களுக்கு ஊதிய உயர்வு வழங்கக்கோரி ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் மனு கொடுக்கும் போராட்டம்
தூய்மை பணியாளர்களுக்கு ஊதிய உயர்வு வழங்கக்கோரி ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் மனு கொடுக்கும் போராட்டம் நடந்தது.
2. தூய்மை பணியாளர்கள் திடீர் போராட்டம் தினக்கூலி ரூ.600 வழங்க வலியுறுத்தல்
நெல்லையில் தூய்மை பணியாளர்கள் நேற்று திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர்.
3. தூய்மை பணியாளர்களுக்கு வாழைப்பழம்: மாநகராட்சி ஆணையாளர் சதீஷ் வழங்கினார்
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க தூய்மை பணியாளர்களுக்கு சேலம் மாநகராட்சி ஆணையாளர் சதீஷ் வாழைப் பழத்தை வழங்கினார்.
4. தூய்மை பணியாளர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி மாத்திரைகள்: ஆணையாளர் சதீஷ் வழங்கினார்
கொரோனா தடுப்பு பணி மேற்கொள்ளும் தூய்மை பணியாளர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி மாத்திரைகள் வழங்கும் பணியை மாநகராட்சி ஆணையாளர் சதீஷ் தொடங்கி வைத்தார்.
5. ‘துப்புரவு செய்பவர்கள் தூய்மை பணியாளர்கள் என்று அழைக்கப்படுவார்கள்’ - சட்டசபையில் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு
துப்புரவு பணியாளர்கள் இனி தூய்மை பணியாளர்கள் என்று அழைக்கப்படுவார்கள் என்று சட்டசபையில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.