மாவட்ட செய்திகள்

பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களை திரும்ப ஒப்படைக்க லஞ்சம் கேட்ட போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர், பெண் ஏட்டு பணியிடை நீக்கம் + "||" + Confiscated vehicles Asked for a bribe to hand back Police Sub-Inspector, girl Eattu suspended

பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களை திரும்ப ஒப்படைக்க லஞ்சம் கேட்ட போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர், பெண் ஏட்டு பணியிடை நீக்கம்

பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களை திரும்ப ஒப்படைக்க லஞ்சம் கேட்ட போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர், பெண் ஏட்டு பணியிடை நீக்கம்
பந்தலூர் அருகே பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களை திரும்ப ஒப்படைக்க லஞ்சம் கேட்ட போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர், பெண் ஏட்டு பணியிடை நீக்கம் செய்யப்பட்டு உள்ளனர்.
ஊட்டி,

கொரோனா வைரஸ் பரவலை தடுக்க ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு உள்ளது. நீலகிரி மாவட்டத்தில் ஊரடங்கை மீறி அத்தியாவசிய தேவையில்லாமல் வாகனங்களில் சுற்றுபவர்களை போலீசார் கண்காணித்து, அவர்கள் மீது நடவடிக்கை எடுத்து வருகின்றனர். மேலும் வாகனங்களும் பறிமுதல் செய்யப்படுகிறது.

இதற்கிடையில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களை உரியவர்களிடம் ஒப்படைக்கும்படி காவல்துறைக்கு தமிழக அரசு உத்தரவிட்டது. அதன்படி பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் சம்பந்தப்பட்ட போலீஸ் நிலையங்கள் மூலம் உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் நீலகிரி மாவட்டம் பந்தலூர் அருகே எருமாடு போலீஸ் நிலையத்தில் பணிபுரியும் சப்-இன்ஸ்பெக்டர் கண்ணன் மற்றும் தலைமை காவலர் சுமா ஆகியோர் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களை விடுவிக்க உரியவர்களிடம் ரூ.1,500 லஞ்சம் கேட்டதாக தெரிகிறது. இதுகுறித்து போலீஸ் உயர் அதிகாரிகளுக்கு புகார் சென்றது. அதன்பேரில் விசாரணை நடத்தியதில், அவர்கள் லஞ்சம் கேட்டது உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து அவர்கள் 2 பேரையும் பணியிடை நீக்கம் செய்து, நீலகிரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன் உத்தரவிட்டார்.

தொடர்புடைய செய்திகள்

1. வேப்பூர் அருகே ரூ 5 ஆயிரம் லஞ்சம் வாங்கிய மின்வாரிய அதிகாரி கைது
வேப்பூர் அருகே மாவு மில்லுக்கு மின் இணைப்பு கொடுக்க ரூ.5 ஆயிரம் லஞ்சம் வாங்கிய மின்வாரிய வணிக ஆய்வாளரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.
2. ரூ.50 ஆயிரம் லஞ்சம் வாங்கிய பெரம்பலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கைது
பெரம்பலூரில், பறிமுதல் செய்யப்பட்ட லாரிகளை விடுவிக்க கல்குவாரி உரிமையாளரிடம் ரூ.50 ஆயிரம் லஞ்சம் வாங்கிய போலீஸ் இன்ஸ்பெக்டரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.
3. ரூ.16 ஆயிரம் லஞ்சம் வாங்கிய அரசு ஊழியர் சிக்கினார்
அரசு கொள்முதல் நிலையத்தில் ெநல் மூடைகளை கொள்முதல் செய்த ரூ.16 ஆயிரம் லஞ்சம் வாங்கிய ஊழியரை மதுரையில் வைத்து சிவகங்கை போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.
4. திருவாரூரில், லாரி உரிமையாளரிடம் ரூ.8 ஆயிரம் லஞ்சம் வாங்கிய பெண் தாசில்தார் கைது; ரூ.2 ஆயிரம் லஞ்சம் வாங்கிய தாசில்தாரின் டிரைவரும் பிடிபட்டார்
திருவாரூரில், லாரி உரிமையாளரிடம் ரூ.8 ஆயிரம் லஞ்சம் வாங்கிய பெண் தாசில்தாரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர். மேலும் ரூ.2 ஆயிரம் லஞ்சம் வாங்கிய அவரது டிரைவரும் பிடிபட்டார்.
5. தாம்பரத்தில் கார் உரிமையாளரிடம் ரூ.5 ஆயிரம் லஞ்சம் வாங்கிய போக்குவரத்து சப்-இன்ஸ்பெக்டர் கைது
தாம்பரத்தில் கார் உரிமையாளரிடம் ரூ.5 ஆயிரம் லஞ்சம் வாங்கிய போக்குவரத்து சப்-இன்ஸ்பெக்டரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.