மாவட்ட செய்திகள்

வங்கியில் இருந்து பேசுவதாக ஏ.டி.எம். கார்டு எண்ணை கேட்டு பெண்ணிடம் ரூ.1¼ லட்சம் மோசடி + "||" + The ATM said it was speaking from the bank. Rs.1.5 lakh fraud for woman asking for card number

வங்கியில் இருந்து பேசுவதாக ஏ.டி.எம். கார்டு எண்ணை கேட்டு பெண்ணிடம் ரூ.1¼ லட்சம் மோசடி

வங்கியில் இருந்து பேசுவதாக ஏ.டி.எம். கார்டு எண்ணை கேட்டு பெண்ணிடம் ரூ.1¼ லட்சம் மோசடி
வங்கியில் இருந்து பேசுவதாக கூறி ஏ.டி.எம். கார்டு எண்ணை கேட்டு பெண்ணிடம் ரூ.1¼ லட்சம் மோசடி செய்தது தொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர்.
பனைக்குளம்,

ராமநாதபுரம் மாவட்டம் பனைக்குளம் பகுதியை சேர்ந்தவர் நாகநாதன். நகை பட்டறை நடத்தி வருகிறார். இவரது மனைவி மீனா. இவரது செல்போனுக்கு திடீரென அழைப்பு வந்தது. அதில் பேசியவர், மீனாவின் வங்கி கணக்கிற்கான ஏ.டி.எம். கார்டு காலாவதி ஆகிவிட்டது. அதனால் அந்த கார்டை புதுப்பிக்க வேண்டும். உங்களது ஏ.டி.எம்.மில் உள்ள வரிசை எண்ணை தெரிவிக்குமாறு கூறியுள்ளார். அவர் கூறியதை நம்பிய மீனா, தனது ஏ.டி.எம். கார்டின் எண்களை தெரிவித்து உள்ளார்.


இதையடுத்து எதிர்முனையில் பேசியவர் தனது அழைப்பை துண்டித்துவிட்டார். சிறிது நேரத்தில் அவரது செல்போனுக்கு வரிசையாக குறுஞ்செய்தி வந்தது. அதை படித்து பார்த்த போது, மீனாவின் வங்கி கணக்கில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக பணம் எடுத்ததாக குறுஞ்செய்தி வந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர், இதுபற்றி நகைபட்டறையில் இருந்த தனது கணவர் நாகநாதனுக்கு விஷயத்தை தெரிவித்தார்.

புகார்

பின்னர் கணவன்-மனைவி இருவரும் உடனடியாக தங்களது கணக்கு வைத்திருந்த வங்கிக்கு சென்று சம்பவத்தை தெரிவித்தனர். அப்போது அவர்களின் வங்கி கணக்கில் இருந்து ரூ.1 லட்சத்து 30 ஆயிரம் எடுக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது. பின்னர் வங்கி அதிகாரிகள் கொடுத்த தகவலின்பேரில் நாகநாதன், அவரது மனைவி மீனா ஆகியோர் ராமநாதபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு வருண்குமாரிடம் புகார் அளித்தனர். அந்த புகார் குறித்து உடனடி நடவடிக்கை எடுத்து சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை கண்டுபிடிப்போம் என போலீஸ் சூப்பிரண்டு உறுதி அளித்தார்.

இந்த சம்பவம் பனைக்குளம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. ரூ.1,000 கோடி ஹவாலா மோசடி: சீனாவை சேர்ந்த 2 பேர் டெல்லியில் கைது; அமலாக்கத்துறை நடவடிக்கை
ரூ.1,000 கோடி ஹவாலா மோசடி வழக்கில் சீனாவை சேர்ந்த 2 பேரை அமலாக்கத்துறை டெல்லியில் கைது செய்து நடவடிக்கை எடுத்துள்ளது.
2. ரூ.2½ கோடி மோசடி செய்த நிதி நிறுவனம் மீது நடவடிக்கை கலெக்டர் நடவடிக்கை எடுக்க, குடும்பத்துடன் வந்து மனு
தஞ்சை டாக்டர் உள்பட 7 பேரிடம் ரூ.2½ கோடி மோசடி செய்த நிதி நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்குமாறு கலெக்டர் கோவிந்தராவிடம், டாக்டர் குடும்பத்தினருடன் வந்து மனு அளித்தார்.
3. சங்ககிரியில் ஓய்வுபெற்ற வங்கி மேலாளரிடம் ரூ.9 லட்சம் திருட்டு ஓடும் பஸ்சில் 5 பேர் கும்பல் கைவரிசை
சங்ககிரியில் ஓய்வுபெற்ற வங்கி மேலாளரிடம் ஓடும் பஸ்சில் ரூ.9 லட்சத்தை திருடிய 5 பேர் கும்பலை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
4. குமரியில் நிதி நிறுவனம் நடத்தி ரூ.5 கோடி மோசடி தமிழகம் முழுவதும் கைவரிசை காட்டிய 2 பேர் கைது
குமரி மாவட்டத்தில் நிதி நிறுவனம் நடத்தி ரூ.5 கோடி மோசடி செய்த 2 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்கள் தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் இதேபோன்று நிதி நிறுவனம் நடத்தி மோசடி செய்த அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.
5. கள்ளக்குறிச்சி மாவட்ட பழங்குடியினர் நல அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை; ரூ.6¼ லட்சம் சிக்கியது
கள்ளக்குறிச்சி மாவட்ட பழங்குடியினர் நல திட்ட அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் நடத்திய அதிரடி சோதனையில் ரூ.6 லட்சத்து 31 ஆயிரம் பணம் சிக்கியது. சமையலர் பணியை நிரப்புவதற்கு லஞ்சம் வாங்கிய ஊழியர்களிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.