அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் 50 சதவீத ஊழியர்கள் பணியாற்ற பதிவாளர் உத்தரவு
அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் 50 சதவீத ஊழியர்கள் பணியாற்ற பதிவாளர் உத்தரவு.
அண்ணாமலைநகர்,
கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை ஊரடங்கால் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக ஆசிரியர், ஊழியர்கள் வீட்டிலிருந்தே பணியாற்ற உத்திரவிடப்பட்டிருந்தது. இந்நிலையில் நாளை(திங்கட்கிழமை) முதல் தமிழக அரசின் உத்தரவுபடி அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் அனைத்து துறைகள், அலுவலகங்கள் 50 சதவீத ஊழியர்களுடன் பணியாற்றுமாறு பல்கலைக்கழக பதிவாளர்(பொறுப்பு) கிருஷ்ணமோகன் உத்தரவிட்டுள்ளார். பல்கலைக்கழகத்தின் அனைத்து அலுவலகங்களிலும் ஊழியர்களை இரு குழுக்களாக பிரித்து வாரத்தில் தலா 2 நாட்கள் வீதம் 6 நாட்களும் பணியாற்ற உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் அனைத்து அலுவலக தலைமை பொறுப்பில் இருப்பவர்கள் வாரத்தின் 6 நாட்களும் பணியாற்ற வேண்டும் என்றும், சுழற்சி முறையிலான பணியின் போது வீட்டில் இருக்கும் ஊழியர்கள் எலக்ட்ரானிக் முறையில் அலுவலகத்தில் தொடர்பில் இருக்க வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது. மேற்கண்ட தகவல் அண்ணாமலை பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Related Tags :
Next Story