மாவட்ட செய்திகள்

10-ம் வகுப்பு மாணவர்கள் தேர்வு மையத்துக்கு வர இ-பாஸ் வசதி அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி + "||" + Interview with e-Pass Facilities Minister Sengottaiyan

10-ம் வகுப்பு மாணவர்கள் தேர்வு மையத்துக்கு வர இ-பாஸ் வசதி அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி

10-ம் வகுப்பு மாணவர்கள் தேர்வு மையத்துக்கு வர இ-பாஸ் வசதி அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி
10-ம் வகுப்பு மாணவர்கள் தேர்வு மையத்துக்கு வர இ-பாஸ் வசதி செய்யப்பட்டுள்ளது என்று அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கூறினார்.
ஈரோடு,

10-ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு அந்தந்த பள்ளிகளிலேயே தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. 12 ஆயிரம் பள்ளிகளும் தேர்வு மையங்களாக மாறும். அனைத்து தேர்வு மையங்களையும் அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் ஆய்வு செய்வார்கள். ஒரு வகுப்பறைக்கு 10 மாணவர்கள் மட்டுமே தேர்வு எழுத அனுமதிக்கப்படுவார்கள். தனியார் பள்ளிகளில் அரசு பள்ளி ஆசிரியர்களும், அதேபோல் அரசு பள்ளியில் தனியார் பள்ளி ஆசிரியர்களும் பணிபுரிவார்கள்.


மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் தேர்வு நுழைவு சீட்டு வழங்குவதற்கான ஏற்பாடு நடைபெற்று வருகிறது. வெளி மாவட்டங்களில் உள்ள தனியார் பள்ளி மாணவர்களை 3 நாட்களுக்கு முன்பே அழைத்து வந்து தனியார் பள்ளி விடுதிகளில் தங்க வைத்து தேர்வு எழுத ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இ-பாஸ் வசதி

மாணவர்கள் தேர்வு மையங் களுக்கு வருவதற்கு இ-பாஸ் வசதி பெற கடிதங்கள் அனுப்பப்பட்டுள்ளன. தேர்வு மையங்களில் முறையான சுகாதார பணிகள் மேற்கொள்ளப்படும். மாணவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்து தரப்படும்.

இவ்வாறு அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

1. நிலநடுக்கத்துக்கு மத்தியிலும் பேட்டியை தொடர்ந்த நியூசிலாந்து பிரதமர்
நிலநடுக்கத்துக்கு மத்தியிலும் நியூசிலாந்து பிரதமர் தனது பேட்டியை தொடர்ந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.
2. கொரோனா தொற்று பாதிக்கப்பட்ட இடங்களில் ஆசிரியர்கள் முழு கவச உடையுடன் பணியாற்ற ஏற்பாடு அமைச்சர் பேட்டி
கொரோனா தொற்று பாதிக்கப்பட்ட இடங்களில் ஆசிரியர்கள் முழு கவச உடையுடன் பணியாற்ற ஏற்பாடு செய்யப்படும் என்று அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கூறினார்.
3. மகளிர் சுயஉதவி குழுக்களுக்கு ரூ.26 கோடி கடன் கடலூரில் அமைச்சர் எம்.சி.சம்பத் வழங்கினார்
மத்திய கூட்டுறவு வங்கி சார்பில் மகளிர் சுயஉதவி குழுக்களுக்கு ரூ.26 கோடி கடன் கடலூரில் அமைச்சர் எம்.சி.சம்பத் வழங்கினார்.
4. அரசு விதிகளை மீறும் கடைகள் மீது நடவடிக்கை அமைச்சர் தங்கமணி பேட்டி
அரசு விதிமுறைகளை மீறும் கடைகளின் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் தங்கமணி கூறினார்.
5. கொரோனா தொற்று அவமானப்படும் விஷயம் இல்லை சுகாதாரத்துறை இயக்குனர் பேட்டி
கொரோனா தொற்று ஏற்பட்டால் அவமானப்பட ஏதும் இல்லை என்று சுகாதாரத்துறை இயக்குனர் மோகன்குமார் கூறினார்.