குஜராத், மராட்டியத்தில் இருந்து திருக்கோவிலூர் திரும்பிய 28 பேர் தனிமைப்படுத்தும் மையத்தில் தங்க வைப்பு


குஜராத், மராட்டியத்தில் இருந்து திருக்கோவிலூர் திரும்பிய 28 பேர் தனிமைப்படுத்தும் மையத்தில் தங்க வைப்பு
x
தினத்தந்தி 18 May 2020 7:39 AM IST (Updated: 18 May 2020 7:39 AM IST)
t-max-icont-min-icon

குஜராத், மராட்டியத்தில் இருந்து திருக்கோவிலூர் திரும்பிய 28 பேர் தனிமைப்படுத்தும் மையத்தில் தங்க வைப்பு.

திருக்கோவிலூர்,

வெளிமாநிலங்களில் இருந்து சொந்த ஊர் திரும்பும் தொழிலாளர்கள் வருகையால் அந்த அந்த பகுதியில் வருவாய்த் துறையினர் சொந்த ஊர் திரும்பும் தொழிலாளர்களை தனிமைப்படுத்தி கண்காணிக்கும் மையம் அமைத்து, அங்கு அந்த தொழிலாளர்களை தங்க வைத்து கண்காணித்து வருகின்றனர். அதேபோல் திருக்கோவிலூர், பரடாப்பட்டு, பனப்பாடி, மேமாளூர், வடமருதூர், மாடாம்பூண்டி ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் குஜராத்தில் இருந்து 6 பேரும், மராட்டியத்தில் இருந்து 22 பேரும் அத்திப்பாக்கம் வழியாக சொந்த ஊர் திரும்பினார்கள். அங்கு தாசில்தார் சிவசங்கரன் நேரில் சென்று வெளிமாநிலத்தில் இருந்து வந்த 28 பேரையும் அத்திப்பாக்கத்தில் உள்ள ஒரு தனியார் மேல்நிலைப்பள்ளியில் தங்க வைத்தார். மேலும் சுகாதாரத்துறையினர் ரத்த மாதிரி சோதனையும் எடுத்துள்ளனர். சோதனையின் முடிவு வந்த பின்பு 28 பேரும் உரிய காலத்தில் அவரவர் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்படுவார்கள் எனவும், அதுவரை தனிமைப்படுத்தப்பட்ட கண்காணிப்பு மைத்தில் தங்க வைக்கப்படுவார்கள் என்றும் தெரிவித்தார். தனிமைப்படுத்தப்பட்ட கண்காணிப்பு மையத்தில் மணலூர்பேட்டை சப்-இன்ஸ்பெக்டர் ராஜசேகர் தலைமையில் போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது.

Next Story